மத்திய போதைப் பொருள் தடுப்பு பணியில் தமிழக ஐபிஎஸ் அதிகாரி சுதாகருக்கு கூடுதல் பொறுப்பு | Tamil Nadu IPS officer Sudhakar gets additional responsibility in Central Narcotics Control Unit

1379847
Spread the love

சென்னை: தமிழக காவல் துறை​யில் பல்​வேறு முக்​கிய பொறுப்​பு​களில் பணி​யாற்​றிய​வர் ஆர்​.சு​தாகர். இவர் சென்னை காவல் துறை​யில் துணை ஆணை​யர், இணை ஆணை​யர், கூடு​தல் காவல் ஆணை​யர், மேற்கு மண்டல ஐஜி என பல்​வேறு பதவி​களில் இருந்​துள்​ளார். சென்னை போக்​கு​வரத்து காவல் கூடு​தல் ஆணை​ய​ராக பணி​யாற்​றிய​போது, விருப்​பத்​தின் பேரில் மத்​திய அரசு பணிக்கு சென்​றார்.

மத்​திய அரசு பணி​யில் போதைப்​பொருள் தடுப்பு வடகிழக்கு பிரி​வில் துணை இயக்​குநர் ஜெனரலாக அசாம் மாநிலம் கவு​காத்​தி​யில் பணி​யாற்றி வரு​கிறார். இந்​நிலை​யில், அவருக்கு போதைப்​பொருள் தடுப்பு தெற்கு பகுதி துணை இயக்​குநர் ஜெனரல் என்ற பொறுப்பை கூடு​தலாக வழங்கி மத்​திய அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

இந்த புதிய பொறுப்​பின் மூலம் தென் மாநிலங்​களான தமிழகம், கேரளா, கர்​நாட​கா, ஆந்​தி​ரா, தெலங்​கானா மற்​றும் புதுச்​சேரி ஆகிய மாநிலங்​களின் போதைப்​பொருள் ஒழிப்பு நடவடிக்​கை​யும் இனிமேல் இவரது கட்​டுப்​பாட்​டில் வரும். சென்னை அம்​பத்​தூர் அருகே உள்ள அயப்​பாக்​கத்​தில் செயல்​படும் மத்​திய போதைப்​பொருள் தடுப்பு அலு​வல​கத்​தில் விரை​வில் பொறுப்​பேற்​க உள்​ளார்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *