"மத ரீதியான பாகுபாடு; படைப்பாற்றல் இல்லாதோர் கையில் அதிகாரம்" – பாலிவுட் குறித்து ஏ.ஆர். ரஹ்மான்

Spread the love

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பிபிசி ஏசியன் நெட்வொர்க் ஊடகத்திற்குப் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் பாலிவுட் குறித்து சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார்.

“பாலிவுட் திரைத்துறையில் படைப்பாற்றல் இல்லாத நபர்களின் கைகளில் அதிகாரம் உள்ளது.

அவர்கள்தான் முடிவெடுக்கும் இடத்தில் இருக்கிறார்கள். பாலிவுட்டில் மத ரீதியான பாகுபாடுகள் நிலவுவதாக எனக்கு செவி வழிச் செய்தி வந்தது. ஆனால், என் முகத்துக்கு நேராக எதுவும் நடக்கவில்லை.

ஏ.ஆர் ரஹ்மான்
ஏ.ஆர் ரஹ்மான்

நான் வேலைக்காக யாரையும் தேடிச் செல்வதில்லை. எனது வேலையில் உள்ள நேர்மை எனக்கு வாய்ப்புகளைத் தேடித் தரும் என்று நம்புகிறேன்.

பாலிவுட் சினிமாவில் என்னுடைய ஆரம்பக் கால நாள்கள் அவ்வளவு இனிமையாக இருந்ததில்லை.

பாலிவுட்டில் நான் இசையமைத்ததற்கு முன்பாக எந்தத் தென்னிந்திய இசையமைப்பாளரும் இசையமைத்தது இல்லை.

இளையராஜா சில படங்களுக்கு இசையமைத்தார். ஆனால் அதைத் தாண்டி வேறு யாரும் இசையமைக்கவில்லை. அதனால் புதிய அனுபவமாக இருந்தது.

90-களில் ‘ரோஜா’, ‘பம்பாய்’, ‘தில் சே’ போன்ற படங்கள் புகழ்பெற்றாலும், ‘தால்’ திரைப்படம்தான் வட இந்தியாவில் ஒவ்வொரு வீட்டிலும் என்னுடைய இசையைக் கொண்டு சேர்த்தது.

நான் அப்போது இந்தி பேசியதே இல்லை. ஒரு தமிழராக நமக்குத் தமிழ் மீது மிகுந்த பற்று இருப்பதால், இந்தி கற்பது கடினமாக இருந்தது.

ஏ.ஆர் ரஹ்மான்
ஏ.ஆர் ரஹ்மான்

இயக்குநர் சுபாஷ் கய் என்னிடம், ‘உனது இசை எனக்குப் பிடிக்கும், ஆனால் நீ இங்கே நீண்ட காலம் நிலைத்து நிற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

அதனால் நீ இந்தி கற்றுக்கொள்ள வேண்டும்’ என்றார். அதற்கு நான், ‘சரி, நான் இந்தி கற்கிறேன். அதைவிட ஒரு படி மேலே சென்று, இந்தி இசைக்குத் தாயாக விளங்கும் உருது மொழியையும் கற்றுக்கொள்கிறேன் என்று கூறினேன்” என ஏ.ஆர். ரஹ்மான் பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *