“ஜெயலலிதா மக்கள் போற்றும் மகத்தான தலைவர்’ என பிரதமர் நரேந்திர மோடி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசியிருக்கிறார்.
‘மனதின் குரல்’ வானொலி நிகழ்ச்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து பேசிய பிரதமர் மோடி, “மக்கள் போற்றும் மகத்தான தலைவர் ஜெயலலிதா.

நான் தமிழ்நாட்டிற்கு எப்போது சென்றாலும் அந்த மாநில மக்கள் ஜெயலலிதா மீது எந்த அளவிற்கு மரியாதை வைத்திருக்கிறார்கள் என்பதை நேரில் பார்க்கிறேன்.
ஜெயலலிதாவின் பெயரை சொல்லும்போதே மக்களின் முகத்தில் பிரகாசம் வருகிறது.
அந்த மாநிலத்தின் சட்ட ஒழுங்கை பாதுகாக்க அவர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார்.