மனிதநேயம் தான் இந்தியர்களின் அடையாளம்: பிரதமர் மோடி பேச்சு

Dinamani2f2024 08 222fa2z1oieb2fmodi.jpg
Spread the love

வார்சா: அனைவருடனும் இணைய விரும்பும் இந்தியா அனைவரின் வளர்ச்சியையும் விரும்புகிறது என்றும், உலகில் எந்த நாடும் நெருக்கடியை எதிர்கொள்ளும் போது இந்தியாதான் முதலில் உதவிக்கரம் நீட்டும். அந்த மனிதநேயம் தான் இந்தியர்களின் அடையாளம் என்று நரேந்திர மோடி கூறினார்.

இந்தியாவின் வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்களை கோடிட்டுக் காட்டி பேசிய பிரதமர் நரேந்திர மோடிக்கு இந்திய வம்சாவழியினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக போலந்து நாட்டுக்கு சென்றுள்ள பிரதமா் நரேந்திர மோடி, அங்கிருந்து உக்ரைனுக்கு வெள்ளிக்கிழமை(ஆகஸ்ட் 23) செல்லவிருக்கும் நிலையில், வார்சாவில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பேசினார்.

அப்போது, “பல தலைமுறைகளாக இந்தியா அனைத்து நாடுகளிலிருந்தும் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருந்தது.

ஆனால், இன்றைய இந்தியாவின் கொள்கை அனைத்து நாடுகளுடனும் சமமான நெருக்கத்தை பேணுவதே இந்தியாவின் உத்தி. இன்றைய இந்தியா அனைவருடனும் இணைய விரும்புகிறது. இந்தியா அனைவருடைய வளர்ச்சியையும் விரும்புகிறது, அதுகுறித்து பேசுகிறது, அனைவரது நலன்கள் சார்ந்தும் சிந்திக்கிறது. அதனால் இன்று உலகமே இந்தியாவை மதிக்கிறது. இந்தியாவை அனைவரது நண்பர் என்று கூறுகிறது..

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து பேசிய பிரதமர் மோடி, அடுத்த சில ஆண்டுகளில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

2047-ஆம் ஆண்டுக்குள் நாடு வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற தனது தொலைநோக்குப் பார்வை குறித்தும் பேசினார்.

2022 இல் தொடங்கிய போருக்குப் பிறகு உக்ரைனில் சிக்கித் தவித்த இந்திய மாணவர்களுக்கு உதவியதற்காக இந்திய வம்சாவழியினருக்கு பாராட்டு தெரிவித்த மோடி, இந்திய வம்சாவழியினர் இந்தியாவுக்கான சுற்றுலாவின் பிராண்ட் தூதராகவும் அதன் வளர்ச்சியின் ஒரு பகுதியாகவும் இருக்க வேண்டும் என்று மோடி அழைப்பு விடுத்தவர் இந்திய மாணவர்களை மீட்பதற்கு ஏதுவாக போலந்து விசா கொள்கைகளை தளர்த்தியை மோடி நன்றியுடன் நினைவுகூர்ந்தார்.

இந்த ஆண்டு போலந்து முதல் முறையாக கபடி சாம்பியன்ஷிப்பை நடத்த உள்ளதால், இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்பின் ஆதாரமாக கபடி உருவானது என்று சுட்டிக்காட்டிய மோடி, புதுமை மற்றும் இளைஞர்கள் இரு நாடுகளின் வளர்ச்சிக்கான ஆற்றலை அளிக்க உள்ளனர்.இந்தியா மற்றும் போலந்து ஆகிய இரு நாடுகளும் சமூக பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளன.

புலம்பெயர்ந்த இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடியை வாழ்த்தினர் மற்றும் பிரதமர் கூட்டத்தினரை நோக்கி கை அசைத்ததுடன், அங்கிருந்த சிலருடன் கைகுலுக்கினார்.

“இந்தியாவின் ஞானம் உலகளாவியது. இந்தியாவின் பார்வை உலகளாவியது. இந்தியாவின் கலாசாரம் உலகளாவியது. அக்கறையும் கருணையும் உலகளாவியது. நம் முன்னோர்கள் நமக்கு வசுதைவ குடும்பம் என்ற மந்திரத்தை வழங்கினர். உலகம் முழுவதையும் ஒரே குடும்பமாக கருதினோம், இது கொள்கைகளிலும் முடிவுகளிலும் தெரியும். இன்றைய இந்தியாவின் ஜி20 நேரத்தில், இந்தியா ‘ஒரு பூமி, ஒரு குடும்பம் மற்றும் ஒரு எதிர்காலம்’ என்று அழைப்பு விடுத்தது.

ஐரோப்பிய நாடுகளுடனான இந்தியாவின் உறவை பலப்படுத்தும் விதமாக போலந்து-இந்தியா உறவு அமைந்திருக்கிறது. இந்தியாவிற்கும் போலந்துக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதை வலியுறுத்தி, “புதிய தொழில்நுட்பம் மற்றும் தூய்மையான எரிசக்தி போன்ற துறைகளில் இந்தியா-போலந்து இடையேயான கூட்டாண்மை தொடர்ந்து அதிகரித்து வருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். பல இந்திய நிறுவனங்கள் இங்கு முதலீடு செய்து, வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன.

நாளை, நான் அதிபர் ஆண்ட்ரீஸ் டூடா மற்றும் பிரதமர் டொனால்ட் டஸ்க்கை சந்திக்க உள்ளேன். இந்த சந்திப்புகள் மூலம், அற்புதமான இந்தியா-போலந்து கூட்டாண்மை மற்றும் வர்த்தகம் மேலும் பலப்படும் என்று அவர் மேலும் கூறினார்.

இந்தியர்கள் தங்கள் முயற்சிகள், செயல்கள் மற்றும் மனிதநேயத்திற்கு பெயர் பெற்றவர்கள் என்று அவர் கூறினார். இந்தியர்கள் தங்கள் முயற்சியால் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர் என்று கூறினார்.

மனிதநேயம் இந்தியர்களின் அடையாளம் என்று கூறிய மோடி, உலகில் எந்த நாடும் நெருக்கடியை எதிர்கொள்ளும் போது இந்தியாதான் முதலில் உதவிக்கரம் நீட்டும் என்றும் கூறினார். கரோனா பெருந்தொற்றுகளின் போது 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு இந்தியா எவ்வாறு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை வழங்கியது என்பதை மோடி நினைவு கூர்ந்தார்.

உலகில் 150 நாடுகளில் நிலநடுக்கம் அல்லது எந்தவொரு பேரழிவு ஏற்பட்டாலும், இந்தியாவிடம் உள்ள ஒரே ஒரு மந்திரம் மனிதநேயம். இந்த உணர்வில் உலகம் மக்களுக்கும் உதவுகிறது இந்தியா என்று பிரதமர் மோடி கூறினார்.

இரண்டாம் உலகப் போரின்போது போலந்து சிரமங்களைச் சந்தித்தபோது, ​​போலந்தில் இருந்து ஆயிரக்கணக்கான பெண்களும் குழந்தைகளும் தங்குமிடத்திற்காக அகதிகளாக அலைந்தபோது, ​​ஜம்சாஹேப், திக்விஜய் சிங், ரஞ்சித் சிங் ஜடேஜா ஆகியோர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்காக ஒரு சிறப்பு முகாமைக் கட்டி அடைக்கலம் கொடுத்ததை நினைவு கூர்ந்த மோடி, அவர்கள் போலந்தில் இன்றும் ‘நல்ல மகாராஜா’ என்று தான் நினைவுகூரப்படுகிறார்கள். ​​இந்தியா மற்றும் போலந்து இடையே பகிரப்பட்ட வரலாற்றை நினைவுகூரும் இரண்டு இடங்களான வார்சாவில் உள்ள நவாநகர் மற்றும் கோலாப்பூர் நினைவிடத்திற்கு சென்று மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

கடைசியாக 1979 இல் அப்போதைய பிரதமர் மொரார்ஜி தேசாய் போலந்து சென்றிருந்தார். இந்தியாவும் போலந்தும் தங்கள் ராஜதந்திர உறவுகளை ஸ்தாபித்ததன் 70 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வேளையில், 45 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய ஐரோப்பிய நாட்டிற்குச் செல்லும் முதல் இந்தியத் தலைவர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.

புலம்பெயர்ந்த இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடியை வாழ்த்தினர் மற்றும் அவர்கள் தங்கள் அன்பை பரிமாறிக் கொண்டார். பிரதமர் கூட்டத்தினரை நோக்கி கை அசைத்ததுடன், அங்கிருந்த சிலருடன் கைகுலுக்கினார். இந்திய வம்சாவளியினர் பிரதமர் மோடியை பாராட்டி கோஷங்களை எழுப்பினர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *