மனிதநேயம்..! மியான்மர் சென்றடைந்த 442 மெட்ரிக் டன் உணவுப் பொருள்கள்!

Dinamani2f2025 04 052flu460tn12fgnv8swebyamifgo.jpg
Spread the love

நிலநடுக்கத்தால் நிலை குலைந்துள்ள மியான்மருக்கு இந்தியாவிலிருந்து கூடுதலாக 442 மெட்ரிக் டன் உணவுப் பொருள்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

மியான்மரில் கடந்த வாரம் நிகழ்ந்த சக்திவாய்ந்த தொடா் நிலநடுக்கங்களால் அந்நாட்டின் பல பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த இயற்கைப் பேரிடரில் உயிரிழப்பு 3,300-ஆக உயர்ந்திருப்பது கவலையளிக்கும் நிலையில், சுமார் 4,000-க்கும் அதிகமானோா் காயமடைந்துள்ளனா்.

இதனிடையே, மியான்மரில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகள் உதவி வருகின்றன. ‘ஆபரேஷன் பிரம்மா’ திட்டத்தின் கீழ், பல நூறு டன் நிவாரணப் பொருள்களையும், மீட்புக் குழுவினரையும், மருத்துவக் குழுவையும் இந்தியா அங்கு அனுப்பியுள்ளது.

மியான்மருக்கு மனிதாபிமான உதவியாக இந்தியாவிலிருந்து கடந்த ஒரு வார காலத்தில் பல டன் அளவிலான உணவுப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், விசாகப்பட்டினத்திலிருந்து 442 மெட்ரிக் டன் அளவிலான உணவுப் பொருள்களுடன் புறப்பட்ட கடற்படைக் கப்பல் மியான்மரின் திலாவா துறைமுகத்தை சனிக்கிழமை(ஏப். 5) சென்றடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

AP25092271639160

405 மெட்ரிக் டன் அரிசி, 30 மெட்ரிக் டன் சமையல் எண்ணெய், 5 மெட்ரிக் டன் பிஸ்கட்கள், 2 மெட்ரிக் டன் நூடுல்ஸ் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் மியான்மருக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக வெளியுறவு விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மருக்கு மனிதாபிமான அடிப்படையில் நிவாரண உதவிகளை வழங்க குவாட் நாடுகளான இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகள் சேர்ந்து 20 மில்லியன் டாலர் கொடுக்க முன்வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *