சாய்ரா தரப்பிலிருந்து வழக்குரைஞர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் சாய்ரா தெரிவித்திருப்பதாவது, “எங்களுடைய உறவில் ஏற்பட்டுள்ள உணர்ச்சிப்பூர்வ அழுத்தத்தின் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இருவருக்குமிடையேயான காதலைக் கடந்தும், இருவருக்குமிடையே பிரிவும் விரிசலும் ஏற்பட்டுள்ளதாக” அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“மிகுந்த வேதனையுடன் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், சவாலான இந்த தருணத்தில், பொதுமக்கள் எங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கு புரிந்துகொண்டு மதிப்பளிக்கவும்” சாய்ரா பானு கேட்டுக்கொண்டுள்ளார்.
இதன்மூலம், ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு தம்பதியின் கடந்த 29 ஆண்டுகால திருமண உறவு முறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானுவுக்கும் கடந்த 1995-ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த தம்பதிக்கு கதீஜா, ரஹீமா ஆகிய இரு மகள்களும், அமீன் என்ற மகனும் உள்ளனர்.