மனோஜ் மறைவு: அரசியல், திரைப் பிரபலங்கள் இரங்கல்!

Dinamani2f2025 03 252fi1w5r4pz2f5df7a964 D55d 4744 A753 6b2ab3e6daaa.jpg
Spread the love

இயக்குநர் மனோஜ் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதுபற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “நடிகரும் இயக்குநர் பாரதிராஜாவின் மகனுமான மனோஜ் பாரதி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். தனது தந்தையின் இயக்கத்தில் தாஜ்மகால் திரைப்படம் மூலம் அறிமுகமாகி, சமுத்திரம், அல்லி அர்ஜுனா, வருஷமெல்லாம் வசந்தம் எனத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து தனக்கென அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் மனோஜ்.

இயக்கம் உள்ளிட்ட துறைகளிலும் முயன்று பார்த்தவர் மனோஜ். இளம் வயதில் அவர் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

அன்பு மகனை இழந்து வாடும் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் இளையராஜா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் விடியோ வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார். இவர்கள் மட்டுமின்றி சரத் குமார், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிக்க: பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *