“சில நாட்களுக்கு முன்பு ஆர்.ஜி.கர் மருத்துவமனையில் பெண் மருத்துவர் உயிரிழந்த துக்கத்திற்கு, திரிணமூல் சத்ர பரிஷத் நிறுவன நாளை அர்ப்பணிக்கிறேன். கொடூரமான முறையில் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சகோதரியின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். அவர்களுக்கு விரைந்து நீதி கிடைக்க வேண்டும். இந்தியா முழுவதும் இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயல்களால் பாதிப்புக்குள்ளான அனைத்து வயது பெண்களுக்கும் இதயப்பூர்வமான அனுதாபங்கள். மன்னிக்கவும்” என்று கூறியுள்ளார்.
மேலும், “மாணவர்களும், இளைஞர்களும் பெரும் சமூகப் பங்காற்றுகின்றனர். சமுதாயத்தையும் கலாசாரத்தையும் விழிப்புடன் கவனித்து புதிய நாளுக்கான கனவை நனவாக்குவதும், சுற்றியுள்ள அனைவரையும் ஊக்குவிப்பதும் மாணவர் சமுதாயத்தின் பணியாகும்.
அவர்கள் அனைவருக்கும் இன்று எனது வேண்டுகோள் என்னவென்றால், இந்த முயற்சிக்கு ஊக்கமளிக்கவும். உறுதியுடன் இருங்கள். நலமுடன் இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள், ஒளிமயமான எதிர்காலத்திற்காக உறுதியுடன் இருங்கள்” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.