மன்னிப்பு கோரினார் விடுதி காப்பாளர்… என்ஐடி மாணவர்கள் போராட்டம் வாபஸ்!

Dinamani2f2024 08 302fxmdpfq962ftry20nit.jpg
Spread the love

திருச்சி: திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழக(என்ஐடி) விடுதியின் பெண் காப்பாளர் மீது மாணவிகள் புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்த நிலையில், மாணவிகளிடம் தரக்குறைவாக பேசியதற்கு பெண் விடுதி காப்பாளர் மன்னிப்பு கோரியதை அடுத்து மாணவ, மாணவிகள் போராட்டதை கைவிட்டு கலைந்து சென்றனர்.

திருச்சி மாவட்டம், துவாக்குடியில் உள்ள தேசிய தொழில் நுட்பக் கழக(என்ஐடி) மாணவிகள் விடுதியில் வியாழக்கிழமை

வைஃபை, மின்விநியோகத்தில் வியாழக்கிழமை பழுது ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து விடுதி நிா்வாகம், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தொழிலாளரை பழுது நீக்கும் பணிக்கு அழைத்துள்ளனா். பணியில் ஈடுபட்ட அந்த தொழிலாளி, மாணவி ஒருவா் தனியாக அறையில் படித்துக்கொண்டிருந்தபோது, அவரிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளாா். அவா் சப்தம் போட்டதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்த மாணவிகள் திரண்டு வந்தனா்.

இதையடுத்து மாணவி ஒருவா் பாலியல் தொல்லைக்கு உள்ளான சம்பவம் தொடா்பாக, விடுதி காப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதற்கு மாணவி ஒழுங்காக ஆடை அணியாததே பாலியல் அத்துமீறலுக்கு காரணம் என விடுதி காப்பாளர் கூறியதாகவும் குற்றவாளிக்கு ஆதாரவாக பேசியதாக தெரிகிறது. இதையடுத்து திருவெறும்பூா் போலீஸாருக்கு தகவல் அளித்த மாணவிகள் வியாழக்கிழமை இரவு முதல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே, விடுதி மாணவியின் குற்றச்சாட்டு தொடர்பாக நடவடிக்கை எடுக்காத விடுதி காப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வியாழக்கிழமை இரவு முதல் மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தில் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி மாணவ, மாணவிகளிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதனிடையே, கல்லூரி வளாகத்தில் உள்ள என்ஐடி இயக்குநர் அகிலா வீட்டை முற்றுகையிட்டு மாணவிகளிகள்

போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு போலீஸாா், மாணவி புகாரின் அடிப்படையில் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்த நிலையில், அந்த தொழிலாளியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு சிறையில் அடைத்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *