முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அஞ்சலி செலுத்தினர்.
வயதுமூப்பு காரணமாக முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வியாழக்கிழமை இரவு காலமானார்.
எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து அவரது உடல் நேற்று நள்ளிரவு தில்லியில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
இதையும் படிக்க : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்
இந்த நிலையில், பெங்களூருவில் காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் பங்கேற்க சென்றிருந்த மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள், மன்மோகன் சிங் மறைவை தொடர்ந்து அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு தில்லி திரும்பினர்.
தில்லி விமான நிலையத்துக்கு நள்ளிரவில் வருகைதந்த கார்கே மற்றும் ராகுல் காந்தி, நேரடியாக மன்மோகன் சிங் இல்லத்துக்குச் சென்று அவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.