'மன்மோகன் சிங் ஓர் அற்புதமான மனிதர்' – ரஜினி இரங்கல்!

Dinamani2f2024 08 262fks7j6q0o2frajini.jpg
Spread the love

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

‘மன்மோகன் சிங் அற்புதமான மனிதர், சிறந்த பொருளாதார சீர்திருத்தவாதி, அரசியல் பண்பாளர், அவரின் மறைவுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள்’ என்று கூறியுள்ளார்.

இதையும் படிக்க | மன்மோகன் சிங் உடலுக்கு மோடி அஞ்சலி!

மன்மோகன் சிங் மறைவு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று (டிச. 26) இரவு காலமானார். அவருக்கு வயது 92.

முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக வியாழக்கிழமை(டிச. 26) இரவு காலமானார்.

தில்லி இல்லத்தில் குடும்பத்தினர் மற்றும் முக்கிய பிரமுகர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது உடல் தற்போது காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அவரது உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

2004 முதல் 2014 வரையில் இரு முறை பிரதமராக பதவி வகித்துள்ள மன்மோகன் சிங் நிதித்துறை அமைச்சர், திட்டக்குழு துணைத் தலைவர், பொருளாதார ஆலோசகர், நிதி அமைச்சக செயலா், ரிசா்வ் வங்கியின் ஆளுநர் என பல பதவிகளை வகித்தவர். நாட்டின் பொருளாதார சீா்திருத்தவாதிகளில் முக்கியமானவர் மன்மோகன் சிங்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *