இந்த நிலையில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள காஹ் என்ற கிராமத்தில் மன்மோகன் சிங்கிற்கு செவ்வாய்க்கிழமை இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது.
1932 ஆம் ஆண்டு பஞ்சாப் மாகாணத்தில் உள்ள காஹ் என்ற கிராமத்தில் மன்மோகன் சிங் பிறந்தார். சுதந்திரத்துக்கு பிறகு அவர் பிறந்த கிராமம் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் நகருக்கு தென்மேற்கே 100 கிலோ மீட்டர் தொலைவில் இந்த மாகாணம் அமைந்துள்ளது.
1937 ஆம் ஆண்டு இந்த கிராமத்தில் உள்ள பள்ளியில்தான் மன்மோகன் சிங் தனது பள்ளிப் படிப்பை தொடங்கியுள்ளார். அந்தப் பள்ளியில் மன்மோகன் சிங் படித்ததற்கான ஆவணங்கள் இன்னும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.
மேலும், மன்மோகன் சிங்கின் சாதனைகளால் அவர் பிறந்து வளர்ந்த காஹ் கிராமம் வெளிச்சத்துக்கு வந்ததாக கூறும் கிராம மக்கள், உள்கட்டமைப்பு வளர்ச்சிப் பணிகள் மேம்பட்டதாகவும் பள்ளி புதுப்பிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.