தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்போம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான ராமதாஸுக்கும், அக்கட்சித் தலைவரான அன்புமணி ராமதாஸுக்கும் அண்மையில் கருத்து மோதல் இருந்து வந்தது. இந்த நிலையில், நிறுவனர் ராமதாஸின் வழியில் செல்லவிருப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.
தருமபுரியில் பாமக கட்சிக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது, “என்ன தவறு செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை. கடந்த ஒருமாத காலமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன். இன்றுவரையில் மருத்துவர் ராமதாஸ் சொல்வதைத்தான் கேட்டு வந்தேன். இனியும் ஒரு மகனாகவும், கட்சித் தலைவராகவும் அவர் சொல்வதைத்தான் கேட்பேன்.
அவரின் கனவை நிறைவேற்ற தொடர்ந்து செயல்படுவேன். அதைத்தவிர வேறு என்ன இருக்கிறது. எங்கள் குடும்பப் பிரச்னையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அதில் மற்றவர்களின் தலையீடு தேவையில்லை.