“மம்தா பானர்ஜி மற்றும் ஸ்டாலினை நான் தயாராக இருக்கச் சொல்கிறேன்”- சவால் விடுத்த அமித்ஷா| Amit Shah’s direct challenge to mamata banarjee and stalin

Spread the love

அகமதாபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, திமுக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் அடுத்த ஆண்டில் பீகாரைப் போலவே தோல்வியடையும் என சவால் விடுத்திருக்கிறார்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய அமித் ஷா, ” 2014 மக்களவைத் தேர்தலிலிருந்து 2025 வரை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தொடர்ச்சியான வெற்றிகளின் காலமாக இருந்து வருகிறது.

2024 மக்களவைத் தேர்தலில், நமது தலைவர் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகப் பொறுப்பேற்று, பல தசாப்தங்களுக்குப் பிறகு சாதனை படைத்தார்.

நாட்டின் மக்கள் காங்கிரஸையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது உண்மையாகியிருக்கிறது. பீகார் தேர்தலைப் போலவே, தமிழகம் மற்றும் மேற்கு வங்கத்தில் திமுக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் துடைத்து எறியப்படும்.

இன்று இந்த மேடையில் இருந்து, மம்தா பானர்ஜி மற்றும் ஸ்டாலினை நான் தயாராக இருக்கச் சொல்கிறேன்” என நேரடியாகச் சவால் விடுத்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *