மம்மூட்டி – மோகன்லால் படத்தின் டீசர் அப்டேட்!

dinamani2F2025 10 012Fh3s3eajd2FCapture 26
Spread the love

நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் திரைப்படத்தின் டீசர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் முன்னனி நடிகர்களாக இருக்கும் மம்மூட்டி, மோகன்லால் இருவரும் தயாரிப்பு நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனர். தங்களின் படங்களை இவர்களே தயாரித்தும் வெளியிடுகின்றனர்.

இறுதியாக, மம்மூட்டி நடித்த பசூக்கா அவருக்கு சுமாரான வசூலைக் கொடுத்தது. அதேபோல், மோகன்லாலுக்கு துடரும், ஹிருதயப்பூர்வம் ஆகிய படங்கள் வெற்றிப்படமாக அமைந்தன.

தற்போது, இவர்கள் இருவரும் இணைந்து ‘டேக் ஆஃப்’, ‘மாலிக்’ படங்களின் இயக்குநர் மகேஷ் நாராயண் இயக்கத்தில் நடித்து வருகின்றனர். இதில் குஞ்சக்கோ போபன், ஃபஹத் ஃபாசில், நயன்தாரா உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

G2Ju4uWcAA0bg9

படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பேட்ரியாட் (Patriot) எனப் பெயரிட்டுள்ளதாகக் கூறப்படும் இப்படத்தின் டீசர் நாளை (அக். 2) மதியம் 12 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: மறுவெளியீடாகும் நாயகன்!

actor mammooty, mohanlal new movie teaser will be release oct 2.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *