பசங்களும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க. ஆனா, கலெக்டர் ஒதுக்குன நிதி, நிதியாவே இருக்கு நாளு மாசமா. அந்த நிதியை என்ன பண்ணுனாங்கன்னு தெரியல. ஒன்னும் கட்ட ஆரம்பிச்சப்பாடு இல்ல. குழந்தைங்க ரொம்ப சிரமமப்படுறாங்க. அதனால அதிகாரிங்க உடனடியா கலெக்டர் ஒதுக்கின நிதியில கழிவறை கட்டிக் கொடுக்கணும்” என்றனர்.
இது குறித்து, கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜாக்சனிடம் பேசியபோது, “நான் கட்டி முடித்து இருப்பார்கள் என்று நினைத்தேன். இன்னும் கட்ட வில்லையா?” என அதிர்ச்சியுடன் கேட்ட வண்ணமே… இதர தகவல்களை அறிய உதவிப்பொறியாளரை அழைக்குமாறு கூறினார்.
தொடர்ந்து உதவிப் பொறியாளர் பூவராகவன் கூறியதாவது, “டெண்டர் விடப்பட்ட நிலையில், அடுத்த வாரத்தில் கழிவறை கட்டும் பணியானது தொடங்கும்” எனக் கூறினார்.
அரசு விரைந்து துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொண்டு, புதிய கழிவறையை உடனடியாக கட்டித்தர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒரே கோரிக்கையாக உள்ளது.