மருங்கூர் அகழாய்வில் செம்பினால் ஆன அஞ்சனக்கோல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
கடலூர் மாவட்டம் மருங்கூர் அகழாய்வில் இராசராசன் காலச் செம்புக் காசு, சுடுமண்ணால் ஆன வட்டச்சில்லுகள், பச்சை நிறக் கண்ணாடி மணி, ரெளலட்டட் வகைப் பானை ஓடுகள் போன்ற தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டன.
கண்களுக்கு மைத்தீட்டுவதற்கு உபயோகப்படுத்தப்படும் செம்பினால் ஆன அஞ்சனக்கோல் 127 செ.மீ ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த அஞ்சனக்கோல் 4.7செ.மீ நீளமும் 3.6 கிராம் எடையும் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை அருகேயுள்ள பொற்பனைக்கோட்டையில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழாய்வில், 2 சூதுபவள மணிகளும், அக்கேட் வகை மணி ஒன்றும் இன்று கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.