மருதமலையில் 184 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கும் விவகாரம்: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு | HC ordered Hindu Endowments Department to respond over maruthamalai murugan statue issue

1377861
Spread the love

சென்னை: கோவை – மருதமலையில்184 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கும் பணிகளை நிறுத்தக் கோரிய வழக்கில், தமிழக அரசின் இந்து அறநிலைய துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மருதமலையில் 184 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விலங்கு நல ஆர்வலர் முரளிதரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் மருதமலை வனப்பகுதிகளில் யானைகள் வழித்தடங்கள் நிறைந்த பகுதியாக இருப்பதால் அப்பகுதியில் 184 அடி உயரத்தில் முருகன் சிலை அமைக்க தடை விதிக்க வேண்டும் என கோரியுள்ளார்.

நீலகிரி வனப்பகுதியில் இருந்து பிற வனப்பகுதிகளுக்கு செல்ல யானைகள், இப்பகுதியை பாதையாக பயன்படுத்துவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார் இப்பகுதியில் 184 அடி உயரத்துக்கு முருகன் சிலை அமைப்பதால் வனச்சூழல் பாதிக்கப்பட்டு யானை வழித்தடங்கள் துண்டிக்கப்படும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். மேலும் விலங்குகள் – மனித மோதல்கள் அதிகரிக்கும் வாய்ப்பும் அதிகரிக்கும் எனவும் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், வனத்துறை ஒப்புதல்கள் பெறப்படவில்லை என்பதால், முருகன் சிலை அமைக்கும் பணிகளை நிறுத்தும்படி உத்தரவிட வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு, மனுவுக்கு பதிலளிக்கும்படி இந்து அறநிலைய துறைக்கு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை அக்டோபர் 2-வது வாரத்திற்கு தள்ளிவைத்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *