மருதமலை கோயில் மலைப்பாதையில் உலா வந்த காட்டு யானைகள் | Wild elephants roaming in the Maruthamalai temple mountain path

1381245
Spread the love

கோவை: கோவை மருதமலை கோயில் மாலைப் பாதை வழியாக காட்டு யானைகள் கூட்டமாகச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

கோவை மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக உணவு தேடி காட்டு யானைகள் கிராமப் பகுதிகளில் நுழையும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மக்களால் பெயரிடப்பட்ட ரோலக்ஸ் காட்டு யானை பிடிபட்ட நிலையில், ஒற்றைக் கொம்பன் மற்றும் வேட்டையன் ஆகிய காட்டு யானைகள் மீண்டும் ஊருக்குள் வரத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் நேற்று மருதமலை கோயில் மலைப் பகுதி சாலையில் மூன்று குட்டிகளுடன், மூன்று காட்டு யானைகள் சாலையில் நடந்து சென்று, பின் வனப்பகுதிக்குள் சென்றன. மருதமலை கோயிலில் நேற்று சூரசம்ஹார விழா நடந்த நிலையில் வனத்துறையினர் வனப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *