மருத்துவம் படிக்க நீட்தேர்வு எழுதக் கட்டாயப்படுத்திய தந்தை; கொன்று உடலைத் துண்டுத் துண்டாக வெட்டி வீசிய மகன் | Son killed father forced him to write NEET exam to study medicine and threw his body into pieces

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் மன்வேந்திர சிங் (49). தொழிலதிபரான இவரது மகன் அக்‌ஷத் பிரதாப் சிங்(21). மன்வேந்திர சிங் தனது மகனிடம் மருத்துவம் படிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

இதற்காக நீட் தேர்வு எழுதும்படி கேட்டுக்கொண்டார். ஆனால் அக்‌ஷத் சிங்கிற்கு மருத்துவம் படிக்க விரும்பவில்லை. இதனால் அடிக்கடி தந்தை மகன் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

ஒரு முறை இவ்விவகாரத்தில் அக்‌ஷத் சிங் வீட்டை விட்டு வெளியேறினார். இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென மன்வேந்திர சிங் காணாமல் போனார். இது குறித்து உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் விசாரித்து வந்தனர். இதற்காக போலீஸார் மன்வேந்திர சிங் வீட்டிற்குச் சென்று அவரது மகனிடம் விசாரித்தனர்.

மன்வேந்திர சிங்

மன்வேந்திர சிங்

வீட்டில் சோதித்துப் பார்த்தபோது அங்கு இருந்த ஊதா கலர் டிரம்மில் மனித உடல் உறுப்புகள் இருந்தன. இது குறித்து அக்ஷத் சிங்கிடம் விசாரித்தபோது தனது தந்தயைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், “‘மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு எழுதுவது தொடர்பாக தந்தை மகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் வீட்டில் இருந்த துப்பாக்கியை எடுத்து அக்ஷத் சிங் தனது தந்தையைச் சுட்டுக்கொலை செய்துள்ளார்.

உடலை மூன்றாவது மாடியில் இருந்து கீழ் தளத்திற்கு அக்ஷத் சிங் கொண்டு வந்தார். அப்போது அக்ஷத் சிங் சகோதரி இதனைப் பார்த்துவிட்டார். உடனே அவரை மிரட்டி அமைதியாக இருக்கும்படி கூறியுள்ளார்.

தனது சகோதரி கண் முன்னிலையில் தனது தந்தையின் உடலைப் பல துண்டுகளாக வெட்டி பிளாஸ்டிக் பேக்கில் அடைத்து அதனை சதுரனா என்ற இடத்தில் கொண்டு போய் போட்டார். உடலின் சில பகுதிகள் இருந்தன. அதனை வீட்டில் இருந்த ஊதா கலர் டிரம்மில் போட்டு அதனை வீட்டிற்குப் பின்னால் வைத்துள்ளார்” என்றார்.

போலீஸார் உடலின் எஞ்சிய பகுதியைத் தேடி வருகின்றனர். அக்ஷத் சிங்கைக் கைது செய்து மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *