மருத்துவர் பாலியல் வன்கொடுமை: நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் -மருத்துவர்கள் எச்சரிக்கை!

Dinamani2f2024 08 102fvrni22882fpti08 10 2024 000221a.jpg
Spread the love

மருத்துவமனையில் அரை நிர்வாண கோலத்தில் பெண் மருத்துவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ள விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில், அரசு மருத்துவமனையில் பணியாற்றிய முதுநிலை மருத்துவ மாணவி வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவ ஒட்டுமொத்த மருத்துவ உலகையும் பேரதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது.

கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில், வியாழக்கிழமை இரவுப் பணிக்கு வந்த பெண் மருத்துவர், வெள்ளிக்கிழமை காலை கருத்தரங்கு அறையில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவரது கண்கள், வாய் மற்றும் அந்தரங்க உறுப்புகள் ரத்தம் வழிந்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.

முதற்கட்டமாக, மருத்துவ மாணவியின் உடல்கூறாய்வில், மருத்துவர், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு பிறகு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டிருப்பதாகக் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இது தற்கொலை அல்ல என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. பெண் மருத்துவர் வழக்கு சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.

இது குறித்து மருத்துவர்கள், செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மருத்துவமனையில் போதிய பாதுகாப்பு இல்லை என்று கூறியும், முதுநிலை மருத்துவம் பயின்று வரும் மருத்துவர்கள் இனி இரவுப் பணிக்கு வரமாட்டோம் என்று கூறியும், பெண் மருத்துவர் கொலைக்கு கண்டனம் தெரிவித்தும் மெழுகுவர்த்தி ஏந்தி, மருத்துவமனைக்கு ஊர்வலமாக வந்தனர்.

இந்த நிலையில், மருத்துவ கொலை வழக்கில் எவ்வித குறுக்கீடுகளுமின்றி முழு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், மருத்துவர்களின் பாதுகாப்பை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை உடனடியாக அமல்படுத்தவும் அரசுக்கு இந்திய மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. 48 மணி நேரத்தில் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், நாடு தழுவிய போராட்டத்தில் ஈடுபடப் போவதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்ட நபர்

மருத்துவர் கொலை வழக்கில் தொடர்புடையதாக ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கைது செய்யப்பட்டுள்ள நபரை 14 நாள்கள் நீதிமன்ற காவலில் விசாரிக்க கொல்கத்தா நீதிமன்றம் சனிக்கிழமை(ஆக. 10) உத்தரவிட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *