மறக்க முடியாத பயணம்
சமீபத்தில் வெளியான பாட்டல் ராதா படத்தினால் எனக்கு கிடைத்த மிகுதியான அன்புக்கும் பாராட்டும் நான் நெகிழ்ச்சியடைந்துள்ளேன். ’அஞ்சலம்’ கதாபாத்திரத்தில் நடித்தது மறக்க முடியாத பயணம். அழகாக எழுதப்பட்ட கதாபாத்திரத்தில் என்னை நம்பி நடிக்க வைத்த இயக்குநருக்கு எனது இதயப்பூர்வமான நன்றிகள்.
இந்தச் சிறப்பான படத்தில் என்னையும் இணைத்ததற்கு தயாரிப்பாளர்கள் பா.ரஞ்சித், அருண் பாலாஜிக்கு மிகப்பெரிய நன்றிகள். அவர்களுடைய நோகத்தில் நான் பங்குபெற்றதே கௌரவமானது.
அதீத திறமைசாலி குருசோம சுந்தரம் உடன் திரையில் நடித்தது மிகப்பெரிய கற்றல் அனுபவமாக இருந்தது. படம் முழுவதும் எனக்கு அளித்த அவரது ஆதரவுக்கு என் மனமார நன்றி.
எனது நடிப்பைப் பாராட்டிய பத்திரிகைகள், ஊடகங்கள், ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. உங்களின் ஆதரவுதான் எனது சினிமா ஆர்வத்துக்கு எரிபொருளாக இருக்கிறது. வருங்காலத்திலும் நல்ல கதைகளைக் கொண்ட தரமான திரைப்படங்களின் நடிக்க காத்திருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.