மறுவெளியீடானது புதுப்பேட்டை!

dinamani2F2025 07 262Fckuqg3vo2FGwwhdzjW0AAfpw0
Spread the love

நடிகர் தனுஷ் நடித்த புதுப்பேட்டை திரைப்படம் இன்று (ஜூலை 26) மறுவெளியீடானது.

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2006-ஆம் ஆண்டு புதுப்பேட்டை வெளியானது. யுவன் சங்கர் ராஜா மிகப்பெரிய பலமாக அமைந்தது.

இந்தப் படத்தில் சோனியா அகர்வால், சிநேகா, அழகம் பெருமாள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள்.

தற்போது, இந்தப் படம் புதுப்பிக்கப்பட்ட 4கே தரத்துடன் மறுவெளியீடாகியுள்ளது.

விஜய் சூர்யா ஃபிலிம்ஸ் இதனை வெளியிடுகிறது. லக்‌ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான இந்தப்படம் தமிழ் ரசிகர்களிடையே ஒரு கல்ட் படமாகக் கொண்டாடப்படுகிறது.

தமிழ் சினிமாவில் மறுவெளியீட்டுப் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகின்றன.

நடிகர் விஜய்யின் கில்லி திரைப்படம் மறுவெளியீட்டில் ரூ.50 கோடி வசூலித்து அசத்தியது குறிப்பிடத்தக்கது.

Poster of the movie Pudupettai.
புதுப்பேட்டை படத்தின் போஸ்டர்.

புதுப்பேட்டை இரண்டாம் பாகம் உருவாகுமா என்ற கேள்விக்கு மத்தியில் இதன் முதல் பாகம் வெளியாகுவது ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The film Pudupettai, starring actor Dhanush, was re-released today (July 26).

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *