மற்ற நாடுகளைப்போல நாமும் துன்புறுத்தக் கூடாது: நிதின் கட்கரி

dinamani2F2025 08 102Fvn5e2gak2Fpage
Spread the love

பொருளாதார செல்வாக்கு பெற்ற நாடுகள், மற்ற நாடுகளை துன்புறுத்துவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

மகாராஷ்டிரத்தில் நாக்பூர் மாவட்டத்தில் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (VNIT) மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டு பேசினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், மற்ற நாடுகளை துன்புறுத்தும் நாடுகளில் பொருளாதார ரீதியாக செல்வாக்கு இருப்பதாலும், சிறந்த தொழில்நுட்பங்கள் இருப்பதாலும்தான் அவர்களால் அவ்வாறு செய்ய முடிகிறது.

இந்தியா தனது ஏற்றுமதியை அதிகரித்து, இறக்குமதியைக் குறைக்க வேண்டும். இந்தியா சிறந்த தொழில்நுட்பம் மற்றும் வளங்களைப் பெற்றால், யாரையும் துன்புறுத்தாது.

ஏனெனில், உலகின் நலனே முக்கியமானது என நமது கலாசாரம் கற்பிக்கிறது என்று தெரிவித்தார்.

இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50 சதவிகித வரி விதிப்பதை சுட்டிக்காட்டி, நிதின் கட்கரி பேசியுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *