மலையாளத்தில் பறம்பின் குரல்: `வீரயுக நாயகன் வேள்பாரி' – நூலை பெற்றுக்கொண்ட சு.வெங்கடேசன்!

Spread the love

சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி-யுமான சு.வெங்கடேசனின் எழுத்திலும், ஓவியர் மணியம் செல்வனின் ஓவியத்துடனும் விகடன் பிரசுரத்தில் வெளியானப் புத்தகம்  `வீரயுக நாயகன் வேள்பாரி’. மக்களின் மனதைக் கவர்ந்த இந்தப் புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளை விற்று சாதனைப் படைத்திருந்தது.

ஒரு லட்சம் பிரதிகளைத்  தாண்டி விற்றதற்கான வெற்றிப் பெருவிழாவும் கொண்டாடப்பட்டது. மேலும் விகடன் பிரசுரத்தில் வெளியான இந்தப் புத்தகம் அமேசான் தளத்தின் சிறந்த புத்தக விற்பனை வரிசையிலும், குறிப்பாக  Action & Adventure பிரிவில் 3 இடத்தைப் பிடித்து சாதனைப் படைத்து பெருமை சேர்த்தது.

வேள்பாரி
வேள்பாரி

இந்த நிலையில், வீரயுக நாயகன் வேள்பாரி நாவலை எழுத்தாளர் பாபுராஜ் களம்பூர் மலையாளத்தில் மொழிப்பெயர்த்திருந்தார். அந்த நூலின் வெளியீட்டுவிழா கோலிக்கோட்டில் நடைபெற்றது.

இது தொடர்பாக எழுத்தாளர் சு.வெங்கடேசன் தன் எக்ஸ் பக்கத்தில், “வீரயுக நாயகன் வேள்பாரியின் மலையாள மொழிபெயர்ப்பு கோழிக்கோட்டில் நடைபெற்று வரும் கேரள இலக்கியத் திருவிழாவில் இன்று டிசி புக்ஸ் சார்பாக வெளியிடப்பட்டது.

மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் எம்.ஏ.பேபி அவர்கள் வெளியிட திரு ஏ.ஜெ.தாமஸ் அவர்கள் பெற்றுக் கொண்டார். நாவலை மலையாளத்தில் பாபுராஜ் களம்பூர் அவர்கள் மொழிபெயர்த்துள்ளார். இனி கேரள வாசகர்களிடம் பறம்பின் குரல் ஒலிக்கும்.” எனப் பதிவிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *