இந்தச் சந்திப்பின்போது பிரதமர் மோடியும் பிரியங்கா காந்தியும் நட்புடன் உரையாடியனர். கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரியங்கா காந்தி, தனது தொகுதி மக்களுடன் உரையாடுவதற்கு வசதியாக மலையாளம் கற்று வருவதாக பிரதமர் மோடியிடம் கூறியிருக்கிறார். மேலும், பிரியங்கா காந்தி பிரதமரிடம் அவரது சமீபத்திய ஆப்பிரிக்க மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கான மூன்று நாள் பயணம் குறித்து கேட்டதாகக் கூறப்படுகிறது.

அதற்கு பிரதமர் மோடி, “இந்தியாவில் உள்ள மக்கள் நினைப்பதை விட எத்தியோப்பியா மிகவும் வித்தியாசமானது. அது சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மிகச் சிறப்பாக முன்னேறி வருகிறது.” என்றார். இதற்கிடையில் தலைவர்களுக்கு மத்தியிலான உரையாடலில் சிரிப்பலைகள் எழுந்ததாகவும் பி.டி.ஐ செய்தி வெளியிட்டிருக்கிறது.
சமாஜ்வாடி கட்சித் தலைவர் தர்மேந்திர யாதவ், “நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மிகக் குறுகிய கால கூட்டத்தொடர்களில் ஒன்று” எனக் கூறியதற்கு கவுன்ட்டர் கொடுத்த பிரதமர் மோடி, “பல நாள்கள் நான் கத்த வேண்டியதில்லை என்பதால் இந்த தேநீர் விருந்தும், இந்த குறுகிய காலக் கூட்டத் தொடரும் என் தொண்டைக்கு நல்லது” என்று வேடிக்கையாகப் பதிலளித்தார்.