பிரபல மலையாள எழுத்தாளர் எம். டி. வாசுதேவன் நாயர்((91) இதய செயலிழப்பு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றிரவு(டிச. 25) காலமானார்.
எம். டி. வாசுதேவன் நாயர் கோழிக்கோடு பேபி மெமோரியல் மருத்துவமனையில் கடந்த 11 நாள்களாக சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை நேற்று(டிச. 24) சற்று மேம்பட்ட நிலையில் அவருக்கு வழங்கப்பட்டு வந்த வெண்டிலேட்டர் சிகிச்சை முறை நீக்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, இன்றிரவு அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதாகவும் அதனை தொடர்ந்து அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.