மல்யுத்தத்திலிருந்து ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சியளித்துள்ளார் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்.
பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்திருந்த இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், நிர்ணயிக்கப்பட்டதைவிட 100 கிராம் கூடுதல் உடல் எடையுடன் இருந்ததால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், மல்யுத்தத்தில் இருந்து வினேஷ் போகத் ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். என்னிடம் இனி போராட சக்தியில்லை என உருக்கமாக தெரிவித்துள்ளார் வினேஷ் போகத்.
“நான் தோற்றுவிட்டேன், மல்யுத்தம் வென்றுவிட்டது… என்னை மன்னிக்கவும், எனது தாயாரின் கனவும் என்னுடைய தைரியமும் உடைந்து போயுள்ளன… இனிமேலும் போராட வலுவில்லை என்னிடம்…
மல்யுத்தத்திலிருந்து(2001 – 2024) விடைபெறுகிறேன். மன்னிப்புக்காக, உங்கள் அனைவருக்கும் எப்போதும் கடமைப்பட்டுள்ளேன்” எனப் திவிட்டுள்ள்டு விடைபெற்றுள்ளார் போகத்.
வினேஷ் போகத் மேல்முறையீடு
தகுதிநீக்கம் செய்யப்பட்டதை எதிா்த்து சா்வதேச விளையாட்டு நடுவா் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள வினேஷ் போகத் தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என புதன்கிழமை கோரிக்கை வைத்துள்ளாா். இந்த விவகாரம் தொடா்பாக வியாழக்கிழமை காலை விசாரணை மேற்கொள்ளப்பட்டு தீா்ப்பு வழங்கப்படவுள்ளது.
முன்னதாக, பாரீஸ் ஒலிம்பிக்ஸ் மல்யுத்த இறுதிப்போட்டியில் விளையாட தன்னை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என அவா் கேட்டிருந்தாா். இந்நிலையில், கூட்டு வெள்ளிப் பதக்கம் வழங்க வேண்டும் என தனது கோரிக்கையை மாற்றியுள்ளாா்.