மல்லி தொடர் நாயகியுடன் இணையும் தமிழும் சரஸ்வதியும் சீரியல் நடிகர்!

Dinamani2f2024 08 162fqo7v96ap2fkanmani.jpg
Spread the love

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புதிய தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்தொடருக்கு கண்மணி அன்புடன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய தொடரின் முன்னோட்டக் காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. முன்னோட்டக் காட்சியை பார்க்கும்போது இரு தோழிகளுக்கு இடையேயுள்ள நட்பு மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த கதையாக இருக்கும் எனத் தெரிகிறது.

naveen
நவீன் வெற்றி

கண்மணி அன்புடன் தொடரின் ஒளிபரப்பு தேதி மற்றும் நேரம் உள்ளிட்ட தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புதிய தொடரில் தமிழும் சரஸ்வதியும் தொடரில் கார்த்திக் பாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமான நடிகர் நவீன் வெற்றி மற்றும் மல்லி தொடரில் ரஞ்சிதா பாத்திரத்தில் நடித்த துஷிதா(கிரேசி தங்கவேல்) ஆகியோர் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

நவீன் வெற்றி முன்னதாக நீலி, தேன்மொழி பி.ஏ., நாம் இருவர் நமக்கு இருவர், கண்ணே கலைமானே உள்ளிட்ட தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மிஸ்டர் & மிஸ்ஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.

thushidha
துஷிதா

நடிகை துஷிதா முன்னதாக திருமகள், சுந்தரி உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார்.

இத்தொடரில் நடிக்கும் பிற கலைஞர்கள் குறித்த தகவல் எதிர்வரும் நாள்களில் தெரிய வரும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *