மழைக்கு ஒரு வாரம் பிரேக்… அடுத்து எப்போது? – தமிழ்நாடு வெதர்மேன்!

Dinamani2fimport2f20222f112f32foriginal2fkur2rain 0211chn 10 4.jpg
Spread the love

சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களில் ஒரு வாரத்துக்கு மழைக்கு வாய்ப்பில்லை என்று தனியார் வானிலை ஆராய்ச்சியாளர் தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, பிரதீப் ஜான் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று(நவ. 17) காலை/மதியம்வரை மழை பெய்யும். அதன்பிறகு ஒரு வாரத்துக்கு மழைக்கு வாய்ப்பில்ல்லை.

இதையும் படிக்க: சென்னை மத்திய சிறைக் கலவரம் நடந்து 25 ஆண்டுகள்!

நவ. 17, 18 ஆகிய தேதிகளில் டெல்டா மற்றும் தென் தமிழகத்தில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம். ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களிலும் இன்று மழைக்கு வாய்ப்புள்ளது.

வடகிழக்கு பருவமழை இன்னும் நிறைவடையவில்லை, பருவமழை பெய்ய அதிகம் வாய்ப்புள்ளது.

இந்த மாத இறுதியில் சக்கரம் ஒன்று தமிழகத்தை நோக்கி வருகிறது. அந்த சக்கரம் தீவிரமடையுமா? அல்லது அதற்கு பெயர் வைக்கப்படுமா? என்பதை கண்காணிக்க 10-12 நாள்கள் ஆகும் என்று அவருடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *