மழை நீரில் மூழ்கும் சாலைகளால் தவிக்கும் அத்திப்பட்டு – ராம்பூர்ணம் நகர் விரிவாக்க பகுதி மக்கள் | rain water stagnant issue in Athipatttu Rampurna nagar

1343912.jpg
Spread the love

சென்னை புறநகர் பகுதி​களான அம்பத்​தூர் தொழிலக எஸ்டேட்டை ஒட்டிய அத்திப்​பட்டு, அயப்​பாக்​கம், ஐசிஎப் காலனி, மேல் அயனம்​பாக்​கம், கீழ் அயனம்​பாக்கம் பகுதி​களில் தொழிற்​சாலைகளுக்கு இணையாக குடி​யிருப்பு​களும் அதிகள​வில் உள்ளன. மேல்​அயனம்​பாக்கம் மற்றும் அத்திப்​பட்டு பகுதி​களில் இயங்​கும் பிரபலமான தனியார் பள்ளி​களில் சுற்று​வட்டார பகுதி​களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்.

முகப்​பேர், நொளம்​பூர், மதுர​வாயல் மற்றும் வானகரம் பகுதி​களில் இந்த பள்ளி​களுக்கு செல்ல மாந்​தோப்பு சாலை​யும், மேல்​அயனம்​பாக்​கத்​தில் இருந்து திரு​வேற்​காடு செல்​லும் சாலை​யும் பிரதானமாக உள்ளது. இதேபோல அத்திப்​பட்டு, ஐசிஎப் காலனி, அம்பத்​தூர் பகுதி​யில் வசிப்​பவர்​களுக்கு செட்​டிதெரு வழியாக செல்​லும் அயப்​பாக்கம் சாலை​யும், செல்​லி​யம்மன் நகர், ராம்​பூர்ணம் நகர் விரிவாக்​கம், ஜேஆர் கேஸ்​டில் டவுன், நியூ சென்னை சிட்டி வழியாக மேல்​அயனம்​பாக்கம் நோக்கி செல்​லும் குறுகலான சிமெண்ட் கால்​வாய் சாலை​யும் பிரதானமாக இருந்து வருகிறது. பள்ளி வேளை​களில் இந்த வழித்தடத்தில் தினமும் நூற்றுக்​கணக்கான வாகனங்கள் செல்​கின்றன.

தொடர் கனமழை பெய்​தால் ராம்​பூர்ணம் நகர் சிமெண்ட் சாலை​யும், செட்டி தெரு – அயப்​பாக்கம் ஐசிஎப் காலனி சாலை​யும் முழு​மையாக துண்​டிக்​கப்​பட்டு விடு​கிறது. இதனால் இப்பகு​தி​களில் வசிப்​பவர்கள் அரை கிமீ தூரத்​தில் உள்ள பள்ளி​களுக்கு அத்திப்​பட்டு, அம்பத்​தூர் வானகரம் சாலை​யில் சுமார் 4 கிமீ தூரம் சுற்றிக்​கொண்டு செல்ல வேண்​டி​யுள்​ளது. பல பெற்றோர் மாற்றுப்​பாதை​யில் சுற்றிக்​கொண்டு செல்ல மனமின்றி, ஆபத்தை உணராமல் குழந்தை​களுடன் ஐசிஎப் – செட்​டிதெரு சாலை​யில் தண்ணீரை கடக்க முற்​படும்​போது விபத்​தில் சிக்கி வருகின்​றனர்.

ராதாகிருஷ்ணன்

இதுகுறித்து அப்பகுதி மக்கள் தெரி​வித்​த​தாவது:ராதாகிருஷ்ணன், ஜேஆர் கேஸ்​டில் டவுன்: ஏற்கெனவே தனியார் பள்ளி​களுக்கு வந்து செல்​லும் வாகனங்​களால் இப்பகு​தி​களில் ஏற்படும் போக்கு​வரத்து நெரிசலுக்கு அளவே இல்லை. அதுவே மழை பெய்​து​விட்​டால் வாகன ஓட்டிகள் திக்​கு​முக்காட வேண்​டி​யுள்​ளது. மேல்​அயனம்​பாக்கம் பிரதான சாலை, வானகரம் – மாந்​தோப்பு சாலை, டிடி மேத்யூ, முகப்​பேர் மேற்கு சப்-வே என திரும்​பும் திசையெங்​கும் நீண்ட வரிசை​யில் வாகனங்கள் அணிவகுத்து நிற்​கும்.

இந்த சூழலில் ராம்​பூர்ணம் நகர் சிமெண்ட் சாலை​யும், அயப்​பாக்கம் சாலை​யும் அவ்வப்​போது வெள்​ளநீரால் சூழ்ந்து சாலை எது, பள்ளம் எது என தெரியாத அளவுக்கு மூழ்கி விடு​வ​தால் இப்பகுதி மக்கள் சொல்ல முடியாத துயரங்களை அனுப​வித்து வருகின்​றனர். இப்பகு​தி​யில் உள்ள நீர்​நிலைகள் முழு​மையாக ஆக்கிரமிக்​கப்​பட்டு வீட்டடி மனைகளாக மாறி​யிருப்​பதும் இப்பிரச்​னைக்கு ஒரு முக்கிய காரணம்.

ஷீலா

ஷீலா, ராம்​பூர்ணம் நகர்: இப்பகு​தி​யில் உள்ள சிமெண்ட் சாலை மேல அயனம்​பாக்​கத்​தை​யும், ஐசிஎப் காலனி செல்​லி​யம்மன் நகரை​யும் இணைக்கும் முக்கிய சாலையாக உள்ளது. இந்த பாதை மழைக்​காலங்​களில் முழு​மையாக துண்​டிக்​கப்​பட்டு விடுகிறது. ஆவடி, திரு​வேற்​காடு, கோலடி, பருத்​திப்​பட்டு, அம்பத்​தூர், அயப்​பாக்கம் என எங்கு மழை பெய்​தா​லும் மொத்த வெள்ள நீரும் இறுதியாக அயப்​பாக்கம் செட்​டிதெரு, அத்திப்​பட்டு ராம்​பூர்ணம் நகரின் விரிவாக்க பகுதி​களைத்​தான் சூழ்ந்து விடுகிறது.

அயப்​பாக்கம் ஐசிஎப் காலனி, அத்திப்​பட்டு ராம்​பூர்ணம் நகர் பகுதிகள் சென்னை மாநக​ராட்சி எல்லைக்​குட்​பட்ட அம்பத்​தூர் மண்டலத்​துக்​குள் வருகிறது. ஆனால் அதிகாரிகள் தேங்​கும் தண்​ணீரை அப்புறப்​படுத்த எந்த நட​வடிக்கை​யும் எடுப்​ப​தில்லை. இந்த இரு சாலைகளையும் மீட்க ​மாநக​ராட்சி நிர்​வாகம் நிரந்தர நட​வடிக்கை எடுக்க வேண்டு​மென்​பதே இப்​பகுதி மக்​களின் ​முக்​கிய கோரிக்​கை​யாகும்​.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *