மாட்டிறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் இடிப்பு

House
Spread the love

மத்தியப் பிரதேசத்தில் மாட்டு இறைச்சி வைத்திருந்த 11 பேரின் வீடுகள் அரசு நிலத்தில் இருந்ததாகக் கூறி இடிக்கப்பட்டு உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாட்டு இறைச்சி

மத்தியப் பிரதேசமாநிலம் மாண்ட்லா மாவட்டம், நைன்பூரில் உள்ள பைன்வாஹி பகுதியில் இறைச்சிக்காக அதிகளவில் மாடுகள் சிறைப்பிடிக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து மாண்ட்லா பகுதி போலீசார் அப்பகுதியில் சோதனைசெய்தபோது பல வீடுகளின் பின்புறத்தில் 150 பசுக்கள் கட்டப்பட்டிருந்தன.

House2

புல்டோசரால் இடித்து தரைமட்டம்

மேலும் 11 பேரின் வீடுகளில் இருந்த குளிர்சாதனப் பெட்டிகளில் மாட்டிறைச்சி,மாட்டின் கொழுப்பு, தோல் மற்றும் எலும்புகள் இருந்து உள்ளன. இதனை போலீசார் கைப்பற்றினர். இவை அனைத்தும் மாட்டு இறைச்சி என்பதை உள்ளூர் அரசு கால்நடை மருத்துவர் மூலம் உறுதி அதிகாரிகள் உறுதி செய்தனர்.
இதற்கிடையே மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட 11 பேரின் வீடுகள் அரசு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அந்த 11 வீடுகளும் புல்டோசரால் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டன. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அரசு நிலத்தில்

இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது, மீட்கப்பட்ட 150 பசுக்களும் கால்நடை காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன. மாட்டிறைச்சி பறிமுதல் செய்யப்பட்ட வீடுகள் அரசு நிலத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்ததால் அவை அகற்றப்பட்டு உள்ளன. கடந்த வெள்ளி (ஜூன் 14) இரவு பசுக்கள் மற்றும் இறைச்சியைக் கைப்பற்றிய பிறகு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகளில் ஒருவர் மட்டுமே பிடிபட்டதால் மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது என்றார்.
மத்தியப் பிரதேசத்தில் பசுவதைக்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:

20-ந்தேதி அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்பு குழு கூட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *