மாணவர்களிடம் ரூ. 1.9 கோடி திருட்டு!

Dinamani2f2024 10 012ff7yb46jm2fc 53 1 Ch1214 36525735.jpg
Spread the love

மேற்கு வங்கத்தில் மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 1.9 கோடி திருடப்பட்டுள்ளதாக சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இடையேயான டிஜிட்டல் இடைவெளியைக் குறைப்பதற்காக, 2020 ஆம் ஆண்டின் இறுதியில் தருனர் ஸ்வப்னோ திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம், மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் ரூ. 10,000 (ஒருமுறை மானியமாக) வழங்கப்படும்.

இதன்மூலம், மாணவர்கள் ஸ்மார்ட்போன், டேப்லேட் வாங்க இயலும். 2024 – 25 நிதியாண்டிலும், இந்த திட்டத்திற்காக சுமார் ரூ. 900 கோடியை மேற்கு வங்க அரசு ஒதுக்கியுள்ளது.

இந்த நிலையில், தருனர் ஸ்வப்னோ திட்டத்தின் மூலம் அளிக்கப்படும் மானியத் தொகை, மாணவர்களின் வங்கிக் கணக்குச் செல்லாமல், வெளிமாநிலத்தில் உள்ள வங்கிக் கணக்குகளுக்குச் செல்வதாக புகார் எழுந்தது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *