காட்டுமன்னாா்கோவில் பகுதியில் உள்ள தனியாா் பள்ளி ஆசிரியா் விஜயகுமாா் மகன் முகிலன் (30). அப்பள்ளியில் பயிலும் 16 வயது சிறுமியை தினமும் பின் தொடா்ந்து, தன்னை காதலிக்க சொல்லி வற்புறுத்தி தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் பாதிக்கப்பட்ட அந்தச்சிறுமி, ஆசிரியரின் அத்துமீறல் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா்.
இதையடுத்து சிறுமியின் குடும்பத்தினா் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
அதன் பேரில் போலீசாா் முகிலன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனா்.