மாணவி பாலியல் வன்கொடுமை: கனிமொழி எம்.பி. கண்டனம்!

Dinamani2f2024 08 272f8vturxus2fkanimozhi20dmk20mp20edi.jpg
Spread the love

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்துக்கு திமுக எம்.பி. கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் காவல்துறையினர், ஞானசேகரன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஒருவரைத் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அண்ணா பல்கலைக்கழகமும் அமைச்சர் கோவி. செழியனும் ஏற்கெனவே விளக்கம் அளித்திருந்தனர்.

இதையும் படிக்க | நல்லகண்ணு 100-வது பிறந்த நாள் விழாவில் முதல்வர் பங்கேற்பு!

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து திமுக எம்.பி. கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில்,

சென்னை அண்ணா‌ பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள நிகழ்வு நெஞ்சைப் பதற வைக்கிறது. இதே நபர் நீண்டகாலமாகப் பல மாணவிகளை பாலியல் ரீதியாக அச்சுறுத்தி வரும் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும் அதிர்ச்சியை அளிக்கிறது.

இந்த குற்றவாளிக்கு உடனடியாகக் கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும். பெண்களுக்கெதிரான எந்த வகை குற்றமாக இருப்பினும் அதைப் பொறுத்துக்கொண்டு இருக்காமல், துணிச்சலுடன் வெளிக்கொண்டு வருவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தித் தருவதும், அனைத்து தளங்களிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான பாதுகாப்பான வாழ்வை உறுதி செய்வதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும்’ என்று பதிவிட்டுள்ளார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *