மாண்புமிகுக்களின் ‘மணி’ விஷயம் | உள்குத்து உளவாளி | Political gossips

Spread the love

தங்களுக்கு மட்டுமல்லாது தங்கள் பகுதியில் உள்ள சில பல தொகுதிகளுக்கும் செலவுகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்கிற அளவுக்கு சில மாண்புமிகுக்கள் ‘மணி’ விஷயத்தில் கொஞ்சம் மதமதப்பாக இருப்பார்கள். அப்படியான மதமதப்பு புள்ளிகளை எல்லாம் லிஸ்ட் எடுத்திருக்கும் டெல்லி தலைமை, சமயம் பார்த்து அவர்களை சுற்றி ‘வளைத்து’ நெருக்கடியை உண்டாக்கத் தயாராக இருக்கிறதாம்.

முக்கியமாக, ஆன்மிக புகழ்பெற்ற இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த மாண்புமிகு தலைவர்கள் இருவரையும், கரூர் கம்பெனியாரையும் முன்னமே கண்காணிப்பில் வைத்திருக்கிறார்களாம், இந்த இம்சைகள் எல்லாம் வேண்டவே வேண்டாம் என முடிவெடுத்துத் தான் சீனியர் ‘துரை’யானவர், “நம்மால இனிமேட்டெல்லாம் கோர்ட்டு கேஸுன்னு அலையமுடியாதுப்பா” என்று சொல்லி ‘பட்டுவாடா’ விவகாரங்களில் இந்த முறை கொஞ்சம் தள்ளியே நிற்கிறாராம்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *