தமிழகத்தின் ‘வளர்ச்சித் துறை’ மாண்புமிகுவானவர், துறைக்கு பொறுப்பேற்ற நாள் முதலே தீபாவளி நேரத்தில் ‘மரியாதை நிமித்தமாக’ முக்கிய மாநகரங்களின் துறை அதிகாரிகளையும் தலைமைப் பொறியாளர்களையும் நேரில் வரச்சொல்லி சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறாராம். இந்த ஆண்டுக்கான ‘தீபாவளி சந்திப்பு’ கடந்த புதன்கிழமை நடந்ததாம்.
சென்னையில் நடந்த இந்த சந்திப்பின் போது மாநகர அதிகாரிகளும் தலைமைப் பொறியாளர்களும் தங்களின் ‘வரவு செலவு’களுக்கு தக்கபடி மாண்புமிகுக்கு தீபாவளி கிஃப்ட்டை மறக்காமல் எடுத்து வந்திருந்தனராம். ஆக மொத்தத்தில், ‘வளர்ச்சித் துறை’ மாண்புமிகு ஐயாவுக்கு இந்த ஆண்டு தீபாவளி கொண்டாட்டம் நான்கு நாள் முன்னதாகவே தொடங்கிவிட்டது.