
இவர்களில் பலர், தாய் நாடான இந்தியாவில் முதலீடு செய்யவே விரும்புகின்றனர். காரணம், வெளிநாடுகளில் வேலை பார்க்கும் பலரும் 15, 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பிவிட வேண்டும் என்று ஆசைப்படுகின்றனர்.
இந்த நிலையில், வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பலரும் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதற்கு அதிகம் விரும்புகின்றனர். வாங்கிய இடம் பத்திரமாக இருக்கும், விலையும் அதிகமாகும் என அவர்கள் நம்புவதால், ரியல் எஸ்டேட்டிலேயே அவர்கள் அதிகம் முதலீடு செய்கின்றனர்.
ஆனால், இந்தியா முழுக்கவுமே ரியல் எஸ்டேட் முதலீடு தொடர்பான சிந்தனை மிகவும் மாறிவிட்டது என்பதை இந்தியாவில் வசிக்கும் மக்களும் புரிந்துகொள்வதில்லை. வெளிநாடுகளில் வசிக்கும் மக்களும் புரிந்துகொள்வதில்லை.