மாதவரம் பகுதியில் கழிவுநீர் உந்துகுழாய் பதிக்கும் பணிகள்: சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு | Sewer pipe laying works in Madhavaram area

1348027.jpg
Spread the love

சென்னை: மாதவரம் ரவுண்டானா அருகிலும், மூலக்கடை சந்திப்பிலும் கழிவுநீர் உந்து குழாய் பதிக்கும் பணிகள் நடைபெறுவதால், மாதவரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர் பகுதிகளில் கழிவுநீர் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டால் மக்கள் அதிகாரிகளை அணுகி தீர்வு காணலாம்.

இதுகுறித்து சென்னைக் குடிநீர் வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மாதவரம் 200 அடி சாலையில் மாதவரம் ரவுண்டனா பாரத் பெட்ரோலியம் பங்க் அருகில் மற்றும் மூலக்கடை சந்திப்பில் கழிவுநீர் உந்து குழாய் இணைக்கும் பணிகளை மேற்கொள்கிறது.

இதனால் இன்று (ஜன.23) காலை 9 முதல் 24-ம் தேதி இரவு 10.00 மணி வரை (37 மணி நேரம்) மாதவரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர் மண்டலங்களுக்கு உட்பட்ட சில பகுதிகளில் கழிவுநீர் உந்து நிலையங்கள் செயல்படாது.

எனவே, மாதவரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணா நகர் மண்டலங்களுக்கு உட்பட்ட இடங்களில் கழிவுநீர் தொடர்பான புகார்களுக்கு பகுதி அலுவலர்களை மாதவரம்- 8144930903, திரு.வி.க நகர்- 8144930906, அம்பத்தூர்- 8144930907, அண்ணாநகர் -8144930908 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தீர்வு காணலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *