புதுதில்லி: வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை மேம்படுத்தும் நோக்கில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல், இம்மாத இறுதியில் இரண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் வேளையில் வர்த்தக தூதுக்குழுவையும் அவரே வழிநடத்த உள்ளார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் 4 ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பான ஐரோப்பிய தடையற்ற வா்த்தக கூட்டமைப்பு (இஎஃப்டிஏ) உடன் இந்தியா விரிவான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதால், இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. அதே வேளையில், இந்த ஆண்டு ஒப்பந்தம் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், 15 ஆண்டுகளில் 100 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டு உறுதிப்பாட்டைப் இந்தியா பெற்றும், அதே நேரத்தில் சுவிஸ் கடிகாரங்கள், சாக்லேட்டுகள் மற்றும் மெருகூட்டப்பட்ட வைரங்கள் ஆகிய பல தயாரிப்புகளை குறைந்த வரிகளில் அனுமதிக்கப்படும்.
இதையும் படிக்க: லம்போர்கினி இந்திய தலைவராக நிதி கைஸ்தா நியமனம்!