மாநிலங்களவையில் மோடியின் முழு உரை

Grjls4rayaa230w
Spread the love

நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மாநிலங்களவையில் நடைபெற்ற விவாதத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று(3 ந்தேதி) பதிலளித்தார். அவர் ஆற்றிய முழு உரை விபரம் வருமாறு:-
குடியரசுத்தலைவர் உரை மீதான விவாதத்தில் கலந்து கொண்ட சுமார் 70 உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு நன்றி.
நாட்டின் ஜனநாயகப் பயணத்தைப் பிரதிபலிக்கும் வகையில், 60 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தியாவின் வாக்காளர்கள் ஒரு அரசுக்கு 3-வது முறையாக ஆதரவளித்துள்ளது வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை . வாக்காளர்களின் முடிவை எதிர்கட்சிகள் அவமதித்து வருகின்றன. கடந்த சில நாட்களாக, அவர்கள் தங்கள் தோல்வியையும் நமது வெற்றியையும் கனத்த இதயத்துடன் ஏற்றுக்கொள்வதைத் கவனித்து வருகிறேன்.

Grjls4tacaanms5

எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை முறியடித்து

தற்போதைய அரசு தனது ஆட்சிக் காலத்தில் மூன்றில் ஒரு பகுதியை மட்டுமே, அதாவது 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இன்னும் மூன்றில் இரண்டு பங்கு அல்லது 20 ஆண்டுகள் எஞ்சியிருக்கிறது. “10 ஆண்டுகளுக்கு மேலாக நாட்டுக்குத் தொண்டாற்ற எங்கள் அரசு மேற்கொண்ட முயற்சிகளுக்கு இந்திய மக்கள் முழு மனதுடன் ஆதரவளித்து ஆசி வழங்கியுள்ளனர். எதிர்க்கட்சிகளின் பிரச்சாரத்தை முறியடித்து, செயல் திறனுக்கு முன்னுரிமை அளித்து, கற்பனையான அரசியலைப் புறக்கணித்து நம்பிக்கை அரசியலுக்கு வெற்றியை வழங்கி மக்கள் தீர்ப்பளித்துள்ளனர்.
அரசியல் சாசனத்தின் 75-வது ஆண்டில் இந்தியா நுழைகிறது. இந்திய நாடாளுமன்றமும் 75 ஆண்டுகளை நிறைவு செய்வது சிறப்பான, மகிழ்ச்சி அளிக்கும் இணை நிகழ்வுகள்.
இந்திய அரசியலில் பின்புலம் கொண்ட குடும்பத்தைச் சாராதவர்கள் நாட்டுக்குத் தொண்டாற்ற வாய்ப்பைப் பெறுவது அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளால் தான். “பாபா சாஹேப் அம்பேத்கர் அளித்த அரசியல் சாசனமே, அரசியல் பின்புலம் சிறிதும் இல்லாத என்னைப் போன்றவர்கள் அரசியலில் நுழைந்து இந்த உயரத்தை எட்டுவதற்கு அனுமதித்துள்ளது. தற்போது மக்கள் அளித்த அங்கீகார முத்திரையால் அரசு தொடர்ந்து 3-வது முறையாக இங்கு அமைந்துள்ளது .இந்திய அரசியல் சாசனம் என்பது வெறும் சட்டப்பிரிவுகளின் தொகுப்பு மட்டுமல்ல, அதன் வீழ்ச்சியும் முத்திரையும் பெரும மதிப்பிற்குரியவை.
நவம்பர் 26-ம் தேதியை அரசியல் சாசன தினமாக தமது அரசு அறிவித்த போது எதிர்கட்சிகள் கடுமையான எதிர்த்தனர். அரசியல் சாசன தினத்தை நினைவுகூரும் தங்களது முடிவு அதன் எழுச்சியை மேலும் பரவச் செய்ய உதவியது. அரசியல் சாசனத்தின் சில பிரிவுகள் ஏன் சேர்க்கப்பட்டன, எவ்வாறு நீக்கப்பட்டன என்பது குறித்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இளைஞர்களிடையே விவாதிக்க வழி ஏற்பட்டது.
அரசியல் சாசனம் நமது மிகப் பெரிய உந்து சக்தி. 75-வது ஆண்டில் நுழையும் அரசியல் சாசனத்தை நாடு முழுவதும் மக்கள் விழாவாகக் கொண்டாட அரசு திட்டமிட்டு உள்ளது.அரசியில் சாசனத்தின் எழுச்சியையும், நோக்கத்தையும் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் கொண்டு சென்று அது பற்றி தெரிந்து கொள்வதை உறுதி செய்ய உள்ளோம்.
பெருந்தொற்று, உலகளாவிய இடையூறுகள் போன்ற சவால்களுக்கு இடையே கடந்த 10 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் 10-வது இடத்திலிருந்து 5-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. இந்த வெற்றி தற்போதைய 5-வது இடத்திலிருந்து பொருளாதாரத்தை 3-வது இடத்திற்கு கொண்டு செல்ல வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் எட்டப்பட்ட வளர்ச்சியின் அளவையும் வேகத்தையும் அதிகரிக்க அரசு உறுதிபூண்டுள்ளது.அடுத்த 5 ஆண்டுகளில் மக்களுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர அரசு உழைக்கும் .நல்லாட்சி உதவியுடன் இந்த சகாப்தத்தை அடிப்படை வசதிகளின் சகாப்தமாக மாற்ற நாங்கள் விரும்புகிறோம் .வறுமைக்கு எதிராகப் போராடுவதற்கு அடுத்த 5 ஆண்டுகள் மிகவும் முக்கியமானது .கடந்த 10 ஆண்டுகளில் பெற்ற அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு வறுமைக்கு எதிராக உறுதியாக நிற்கும் கூட்டுத்திறன் ஏழைகளுக்கு உள்ளது.
தற்போதைய நூற்றாண்டு தொழில்நுட்பத்தால் வழிநடத்தப்படும் நூற்றாண்டாகத் திகழ்கிறது .மருந்து, கல்வி அல்லது புத்தாக்கம் போன்ற துறைகளில் சிறு நகரங்கள் பெரும் பங்கு வகிக்கும்.
விவசாயிகள், ஏழைகள், பெண்சக்தி, இளைஞர்கள் ஆகிய நான்கு தூண்களை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து அரசு கவனம் செலுத்துவது இந்திய வளர்ச்சிப் பயணத்திற்கு மிகவும் அவசியம் .

Grjmyjyaqaalvyf

10 கோடி விவசாயிகள்

கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் மூன்று லட்சம் கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டு 10 கோடி விவசாயிகள் பயனடைந்துள்ளனர் முந்தைய ஆட்சிகளால் கொண்டு வரப்பட்ட கடன் ரத்துத் திட்டங்களில் நம்பகத்தன்மையும் போதிய அளவும் இல்லாததை பிரதமர் சுட்டிக்காட்டினார். தற்போதைய அரசால் செயல்படுத்தப்படும் உழவர் நலத்திட்டங்களின் அவசியம் குறித்து அவர் விளக்கினார்.
எதிர்க்கட்சிகளின் வெளிநடப்புக்குப் பிறகு தமது உரையைத் தொடர்ந்த பிரதமர், வெளிநடப்பு குறித்து அவைத் தலைவரிடம் தமது வருத்தத்தை தெரிவித்து பேசத் தொடங்கினார். தாம் மக்களின் சேவகனாக இருக்க கடமைப்பட்டுள்ளதாகவும், தமது நேரத்தின் ஒவ்வொரு நிமிடத்திற்கும் தாம் மக்களுக்கு பொறுப்பேற்க வேண்டிய நிலையில் உள்ளதாகும். அவையின் பாரம்பரியத்தை எதிர்க்கட்சிகள் அவமதித்துவிட்டதாகப் பிரதமர் விமர்சித்தார்.
அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற தாரக மந்திரத்துடன் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தை அரசு தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது. மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதே அரசின் முன்னுரிமையாக உள்ளது .
சுதந்திரத்திற்குப் பிறகு பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட மக்கள் மீது தற்போது அக்கறை செலுத்தப்படுவது மட்டுமின்றி, அவர்கள் இப்போது மதிக்கப்படுகிறார்கள். மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளின் பிரச்சினைகளை புரிந்துகொண்டு தீர்வு காண வேண்டும் இதன் மூலம் அவர்கள் கண்ணியமான வாழ்க்கையை வாழ முடியும்.

முத்ரா மற்றும் செல்வமகள் சேமிப்பு திட்டம் போன்ற திட்டங்கள் பெண்களுக்கு பொருளாதார ரீதியாக அதிகாரம் அளித்து, அவர்களை சுதந்திரமாக செயல்பட வைத்துள்ளது. சிறிய கிராமங்களில் சுய உதவிக் குழுக்களில் பணிபுரியும் 1 கோடி பெண்கள் இன்று லட்சாதிபதி சகோதரிகளாக மாறியுள்ளனர் இந்த அரசின் தற்போதைய பதவிக்காலத்தில் அவர்களின் எண்ணிக்கையை 3 கோடியாக அதிகரிக்க அரசு பணியாற்றி வருகிறது.

வளர்ந்து வரும் ஒவ்வொரு புதிய துறையிலும் பெண்களைத் தலைமை தாங்கச் செய்வதும், ஒவ்வொரு புதிய தொழில்நுட்பமும் முதலில் பெண்களைச் சென்றடைவதை உறுதி செய்வதுமே அரசின் முக்கிய முன்முயற்சி நமோ ட்ரோன் இயக்கம் வெற்றிகரமாக கிராமங்களில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் முன்னணியில் உள்ளனர்
பெண்களின் பிரச்சினைகளை அரசியலாக்கும் போக்கு மற்றும் குறிப்பிட்ட பிரச்சனைகளை மட்டும் பேசும் அணுகுமுறை ஆகியவற்றை பிரதமர் விமர்சித்தார். மேற்கு வங்க மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து அவர் கவலை தெரிவித்தார்.
அவசர நிலை காலம்
அவசர நிலை காலம் என்பது வெறும் அரசியல் பிரச்சினை மட்டுமல்ல .அது இந்தியாவின் ஜனநாயகம், அரசியலமைப்பு மற்றும் மனிதநேயம் சம்பந்தப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைச் சுட்டிக்காட்டிய மோடி, விடுதலை செய்யப்பட்ட பிறகு முழுமையாக உடல்நலம் குணமடையாமல் ஜெய்பிரகாஷ் நாராயண் காலமானதை கூர்ந்தார். அவசர நிலைக்காலத்தின் போது வீட்டை விட்டு வெளியேறிய பலர் அதன் பின்னர் திரும்பி வரவே இல்லை.

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஊழல்வாதிகளை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.மத்திய அரசு அமலாக்க முகமைகளை தவறாகப் பயன்படுத்துவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை நிராகரிக்கிறேன். ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் எதிர்கட்சிகள் இரட்டை வேடம் போடுகின்றன. முந்தைய அரசுகளில் விசாரணை அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டன. ஊழலுக்கு எதிரான போராட்டம் ஒரு தேர்தல் விஷயம் அல்ல ,அது ஒரு கடமை . 2014-ம் ஆண்டு புதிய அரசு பதவியேற்றபோது, ஏழைகளுக்காக அர்ப்பணிப்பு மற்றும் ஊழலுக்கு எதிரான வலுவான வலுவான போர் ஆகிய இரண்டு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது. ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க புலனாய்வு அமைப்புகளுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

Grjznakaeaa33sw

வினாத்தாள் கசிவு

தேர்வு வினாத்தாள் கசிவில் நமது நாட்டின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்களுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. அத்தகையவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் இளைஞர்கள் எந்தவிதமான சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை இளைஞர்கள் தங்கள் திறனை நம்பிக்கையுடன் வெளிப்படுத்துவதை உறுதி செய்வதற்காக தேர்வை அமைப்பை முழு அளவில் பலப்படுத்தி வருகிறோம்.
மணிப்பூரில் நிலைமையை சீராக்க அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.மணிப்பூரில் அமைதியின்மை ஏற்பட்ட காலத்திலும் அதற்குப் பின்னருமாக 11,000-க்கும் அதிகமான முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டு, தவறு செய்த 500-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மணிப்பூரில் வன்முறை சம்பங்கள் தொடர்ந்து குறைந்த வரும் உண்மையை நாம் ஏற்கவேண்டும்.மணிப்பூரில் அமைதி சாத்தியம் என்ற நம்பிக்கையே இதன் பொருள். மணிப்பூரில் தற்போது பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் மற்றும் இதர நிறுவனங்கள் இயல்பாக நடைபெற்று வருகின்றன.குழந்தைகளின் மேம்பாட்டுப் பயணம் எந்தவகையிலும் பாதிக்கப்படாது.பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும், அமைதியை உறுதி செய்யவும், மூத்த அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்.மணிப்பூரில்இயல்பு நிலையையும், அமைதியையும் உறுதி செய்வதற்கான தமது முயற்சிகளில் உதவி செய்ய ஒத்த கருத்துள்ள அனைவருக்கும் இணைந்து செயல்பட வேண்டும்.

இந்த நூற்றாண்டு இந்தியாவின் நூற்றாண்டாக இருக்கப்போகிறது.வாய்ப்பை நாம் தவறவிட்டுவிடக் கூடாது . பல வாய்ப்புகளை இந்தியா தவறவிட்டதால், நம்மைப்போன்ற இடத்தில் இருந்த நாடுகள் பல வளர்ச்சியடைந்த நாடுகளாக மாறியிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.வளர்ச்சியடைந்த பாரதம் என்பது 140 கோடி மக்களின் இயக்கம்.இந்தியாவில் முதலீடு செய்ய உலகம் தயாராக உள்ளது  உலகின் முதலாவது தேர்வு இந்தியா.இந்த வாய்ப்பை மாநிலங்கள் பயன்படுத்திக்கொள்ள` வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

23 ஆண்டுகளுக்கு முன்பு கைதானவர் போலே பாபா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *