“மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது” – மம்தா பானர்ஜி அரசை கடுமையாக சாடிய உச்ச நீதிமன்றம் | “Law and order in the state has collapsed” – Supreme Court severely slams Mamata Banerjee government.

Spread the love

அப்போது நீதிபதி சூர்யகாந்த், “இது நீதித்துறையின் மன உறுதியைக் குலைக்கச் செய்யப்பட்ட, நன்கு திட்டமிடப்பட்ட முயற்சி. வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த நீதித்துறை அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு கடும் கண்டனங்கள். மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முழுமையாகச் சீர்குலைந்துவிட்டது. மாநில தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறைத் தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து பிற்பகல் 3.30 மணிக்கே தகவல் தெரிவிக்கப்பட்டும், இரவு 8.30 மணி வரை மாநில நிர்வாகம் எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

உயர் நீதிமன்றப் பதிவாளர் மற்றும் தலைமை நீதிபதி நேரிடையாகத் தலையிட்டும், வாய்மொழி உறுதிமொழிகளைத் தாண்டி அதிகாரிகள் களத்திற்கு வரவில்லை. நள்ளிரவுக்குப் பிறகே அந்த அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் சம்பவ இடத்திற்கு வராதது மிகவும் கண்டிக்கத்தக்கது. மாநிலக் காவல்துறையின் மீது நம்பிக்கை இழந்த நிலையில், பாதிக்கப்பட்ட நீதித்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்குப் பாதுகாப்பு அளிக்க உடனடியாக மத்தியப் படைகளை அனுப்புமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *