மாநில உள்நாட்டு உற்பத்தியில் பணித் துறையின் பங்களிப்பு அதிகரிப்பு!

Dinamani2fimport2f20222f32f52foriginal2ftnassembly2.jpg
Spread the love

தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பணித்துறையின் பங்களிப்பு அதிகரித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாட்டின் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி நடப்பு மற்றும் நிலையான விலையில் 2022-23 (விரைவுமதிப்பீடு) மற்றும் 2023-24 (முன்மதிப்பீடு) ஆம் ஆண்டுகளுக்குப் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை மதிப்பிட்டுள்ளது.

இந்திய அரசின் புள்ளியியல் மற்றும் திட்டச் செயலாக்க அமைச்சகத்தால் ஒப்பளிக்கப்பட்ட முறைகள் மற்றும் ஒப்பீட்டுத் தரவுகளைப் பின்பற்றி மதிப்பிட்டுள்ளது. இந்தத் தரவுகள் அனைத்து மாநிலங்களுடன் ஆண்டு வாரியாக ஒப்பிடத்தக்கவை ஆகும். இவ்வகையில் தமிழ்நாட்டின் சாதனைகளை முந்தைய ஆண்டுகளின் செயல்திறனுடன் ஒப்பிட்டு மதிப்பீடு செய்ய உதவுகின்றன.

மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகளின் சிறப்புக்கூறுகள் பின்வருமாறு:

1. தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி நிலையான விலையில் 2022-23 ஆம் ஆண்டில் (விரைவுமதிப்பீடு) ரூ.14,51,929 கோடியாகவும், நடப்பு விலையில் ரூ.23,93,364 கோடியாகவும், 2023-24 ஆம் ஆண்டில் (முன்மதிப்பீடு) நிலையானவிலையில் ரூ. 15,71,368 கோடியாகவும், நடப்பு விலையில் ரூ.27,21,571 கோடியாகவும் இருந்தது.

2. தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 2022-23 ஆம் ஆண்டில் 8.13 சதவீதமாகவும், 2023-24 ஆம் ஆண்டில் 8.23 சதவீதமாகவும் நிலையான விலையில் இருந்தது, அதே நேரத்தில் நடப்பு விலையில் வளர்ச்சி விகிதம் 2022-23 ஆம் ஆண்டில் 15.48 சதவீதமாகவும், 2023-24 ஆம் ஆண்டில் 13.71 சதவீதமாகவும் இருந்தது.

3. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் விகிதம் நடப்பு விலையில் 2022-23 ஆம் ஆண்டில் 8.88 சதவீதமாகவும், 2023-24 ஆம் ஆண்டில் 9.21 சதவீதமாகவும் இருந்தது. நிலையான விலையில் 2022-23 ஆம் ஆண்டில் 9.03 சதவீதமாகவும், 2023-24 ஆம் ஆண்டில் 9.04 சதவீதமாகவும் இருந்தது.

4. தமிழ்நாடு, மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில், 2022-23 ஆம் ஆண்டில் நடப்பு விலையில் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் உள்ளது. நிலையான விலையில், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநிலங்களுக்கு அடுத்தபடியாக 3வது இடத்தில் உள்ளது. 2023-24 ஆம் ஆண்டிற்குச் சில மாநிலங்களுக்கான மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவுகள் வெளியிடப்படாததால் ஒப்பீட்டுத் தரவரிசைகளை மதிப்பிட இயலவில்லை.

5. அகில இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் நிலையான விலையில் 2022-23 ஆம் ஆண்டில் 6.99 சதவீதமாகவும், 2023-24 ஆம் ஆண்டில் 8.15 சதவீதமாகவும் இருந்தது, அதே நேரத்தில் நடப்பு விலையில், வளர்ச்சி விகிதம் 2022-23 ஆம் ஆண்டில் 14.21 சதவீதமாகவும், 2023-24 ஆம் ஆண்டில் 9.60 சதவீதமாகவும் இருந்தது.

6. தமிழ்நாட்டின் பணவீக்க விகிதங்கள் 2022-23 ஆம் ஆண்டில் 5.97 சதவீதமாகவும், 2023-24 ஆம் ஆண்டில் 5.37 சதவீதமாகவும் இருந்தன. இதே காலகட்டத்தில் அகில இந்தியப் பணவீக்க விகிதங்கள் 6.65 சதவீதமாகவும் மற்றும் 5.38 சதவீதமாகவும் இருந்தன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *