மாநில முதல்வர்கள், பல்வேறு கட்சித் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்| CM Stalin DO Ltr to All State CMs & Various political parties

1756475398 dinamani2F2024 11 202Fzm9pr8yo2FMK Stalin tweet desk bench edi
Spread the love

கூட்டாட்சியை வலுப்படுத்துவோம் என்று மாநில முதல்வர்கள், பல்வேறு கட்சித் தலைவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து மாநில முதல்வர்கள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்களுக்கு அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில், இந்திய நாட்டின் கூட்டாட்சி அடித்தளங்களை வலுப்படுத்துவதிலும், அனைத்து மாநிலங்களின் ஒட்டுமொத்த விருப்பத்தைப் பிரதிபலிக்கும் வகையில் இதற்கான ஒரு ஆவணத்தை வடிவமைப்பதிலும் மாநில முதல்வர்களும், கட்சித் தலைவர்களும் தீவிரமாக பங்கேற்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

அக்கடிதத்தில், 1935-ஆம் ஆண்டு இந்திய அரசுச் சட்டத்திலிருந்து குறிப்பிடத்தக்க வகையில் வடிவமைக்கப்பட்ட இந்திய அரசமைப்பானது, ஒன்றியத்திற்கும், மாநிலங்களுக்கும் இடையில் சிறந்ததொரு அதிகார சமநிலையுடன் கூடிய கூட்டாட்சி கட்டமைப்பினை உருவாக்கியது என்றும், இருப்பினும், பல ஆண்டுகளாக இந்த சமநிலை தொடர்ந்து மாற்றப்பட்டு வருவதாகவும், வலுவான ஒன்றியமும், வலுவான மாநிலங்களும் முரண்பட்டிருக்காமல், ஒன்றையொன்று சார்ந்து, ஒவ்வொன்றும் மற்றவற்றின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமென்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

1967-ஆம் ஆண்டில், அன்புக்குரிய தலைவரும், அப்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சருமான டாக்டர் சி.என். அண்ணாதுரை, “இந்தியாவின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாக்கும் அளவுக்கு ஒன்றியம் வலுவாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த நாட்டின் பாதுகாப்பிற்கு ஒன்றியத்தைப் பொறுப்பேற்கச் செய்யத் தேவையான அனைத்து

அதிகாரங்களும் ஒன்றியத்திடம் இருக்க வேண்டும். ஆனால், பாகிஸ்தானியர்களிடமிருந்தோ அல்லது சீனர்களிடமிருந்தோ இந்தியாவைப் பாதுகாக்க, ஒன்றிய அரசு இங்கு ஒரு சுகாதாரத் துறையை வைத்திருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல.

அது எந்த வகையில் இந்தியாவின் இறையாண்மையை வலுப்படுத்துகிறது? ஒன்றிய அரசிடம் கல்வித் துறை இருக்க வேண்டுமா? அங்குள்ள இராணுவ வீரர்களின் போர்த் திறனை அது எந்த வகையில் மேம்படுத்துகிறது?” என்றும் வினவியுள்ளதை தனது கடிதத்தில் முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேபோன்று, தலைவர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி, மாநிலங்களுக்கு சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற கொள்கையைத் தொடர்ந்து ஆதரித்தார் என்றும், 1969-ஆம் ஆண்டு அவர் முதலமைச்சராக இருந்தபோது, ஒன்றிய-மாநில உறவுகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை அளித்திட நீதிபதி பி.வி. ராஜமன்னார் தலைமையில் முதல் குழுவை அமைத்தார் என்றும் குறிப்பிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், 1971-ஆம் ஆண்டு இந்தக் குழு அளித்த அறிக்கை, இந்தியாவில் கூட்டாட்சி குறித்த விவாதங்களை வடிவமைப்பதில் ஒரு மைல்கல்லாக அமைந்தது என்றும், 1974-ஆம் ஆண்டு, தமிழ்நாடு சட்டமன்றம், ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டு, உண்மையான கூட்டாட்சி அமைப்புக்கு வழிவகுக்கும் வகையில் அரசமைப்பைத் திருத்துமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியது என்றும் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

பின்னர், ஒன்றிய அரசு சர்க்காரியா கமிஷன் (1983 – 1988) மற்றும் புஞ்சி கமிஷன் (2007 – 2010) ஆகியவற்றை அமைத்தது என்றும், இவை இரண்டும் அதிகாரப் பகிர்வு குறித்து விரிவான முறையில் ஆராய்ந்தன என்றாலும், அவற்றின் பரிந்துரைகள் உண்மையான, சமநிலையான கூட்டாட்சிக் கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு உதவிடவில்லை என்றும் தனது கடிதத்தில் வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

தீயணைப்புத் துறை ஆணையராக சங்கர் ஜிவால் நியமனம்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *