மானாமதுரையில் கொலை முயற்சி வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் உயிரிழந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யபட்டுள்ளது.

Spread the love

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஜீவா நகரைச் சேர்ந்​தவர் ஜெயக்​கு​மார். கோழிக்​கடை​யில் வேலை செய்​கிறார். இவரது நண்​பர் ஆதனூரைச் சேர்ந்த அழகர். இவர் உணவகத்​தில் பணிபுரி​கிறார். கடந்த 5-ம் தேதி இரவு இரு​வரும் பணி முடிந்து இருசக்கர வாக​னத்​தில், கிருஷ்ண​ராஜபுரம் பகு​தி​யில் சென்​ற​போது, அவர்கள் மீது அதே பகு​தி​யைச் சேர்ந்த பொறி​யியல் பட்​ட​தாரி ஆகாஷ் டெல்​சன், குணா ஆகியோர் வந்த இருசக்கர வாக​னம் மோதி​யது.

இதில், இரு தரப்​புக்​குமிடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது நால்வரும் கலைந்து சென்றனர். பின்​னர், கிருஷ்ண​ராஜபுரம் மயானம் அருகே ஜெயக்​கு​மார், அழகர் ஆகியோர் பேசிக் கொண்​டிருந்​தனர்.

அப்​போது, அங்கு வந்த ஆகாஷ் டெலிசன், குணா ஆகியோர் இரு​வரை​யும் வாளால் வெட்​டி​விட்டு தப்​பிய​தாக கூறப்​படு​கிறது.

இந்த தாக்குதலில் காயமடைந்த ஜெயக்குமார், அழகர்சாமி ஆகிய இருவரும்  காயமடைந்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக மானாமதுரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆகாஷ் டெலிசன் மற்றும் குணா ஆகிய இருவரையும் கைது செய்தனர்.  இந்த வழக்கில் போலீ​ஸாரிடமிருந்து தப்ப முயன்ற ஆகாஷ் டெலிசன் பாலத்திலிருந்து தவறி கீழே விழுந்​த​தில் வலது காலில் எலும்பு முறிவு ஏற்​பட்​டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த ஆகாஷ் டெலிசன்

உயிரிழந்த ஆகாஷ் டெலிசன்

இதையடுத்து நேற்று முன்தினம் மானாமதுரை குற்றவியல் நீதித்துறை நடுவர்  சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு சென்று ஆகாஷ் மற்றும் குணா ஆகிய இருவரையும் 18 ஆம் தேதிவரை  நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். 

இதையடுத்து ஆகாஷ்டெலிசன் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் உள்ள சிறைவாசிகளுக்கான சிகிச்சை மையத்தில் மாற்றப்பட்டார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *