மாபெரும் எழுத்துக்கலைஞனை இழந்திருக்கிறோம்! – வாசுதேவன் நாயர் குறித்து கமல்

Dinamani2f2024 12 252fjlgzd4z02f202412253288168.jpg
Spread the love

மலையாள எழுத்தாளர் எம். டி. வாசுதேவன் நாயர்(91) உடல்நலக் குறைவால் காலமானார். அன்னாரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள கமல் ஹாசன், “ஒரு மாபெரும் எழுத்துக்கலைஞனை இழந்திருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

கமல் ஹாசன் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் கூறியிருப்பதாவது:

மலையாள இலக்கிய உலகின் மிகப்பெரும் ஆளுமை எம்.டி.வாசுதேவன் நாயர் நம்மைவிட்டுப் பிரிந்திருக்கிறார். மலையாளத் திரை உலகுக்கு நான் அறிமுகமான ‘கன்யாகுமரி’ படத்தின் படைப்பாளராக அவருடன் நான் கொண்ட சிநேகத்துக்கு இப்போது ஐம்பது வயது.

கடைசியாக, சமீபத்தில் வெளியான ‘மனோரதங்கள்’ வரை அந்த நட்பு தொடர்ந்தது. மகத்தான நாவல்களை மலையாள இலக்கிய உலகுக்குக் கொடையாகக் கொடுத்ததோடு, வெற்றிகரமான திரைக்கதாசிரியராகவும் திகழ்ந்தவர்.

பத்திரிகைத் துறையிலும் தன் தடத்தை ஆழமாகப் பதித்த அவரது மறைவு திகைப்பையும் வேதனையையும் ஒருங்கே ஏற்படுத்துகிறது. எழுத்தின் எல்லா வடிவங்களிலும் தனக்கான தனித்துவத்தோடு பங்களித்த, ஆளுமை மிக்க ஒரு மனம் ஓய்வு பெற்றிருக்கிறது. இது பேரிழப்பு.

தென்னிந்திய இலக்கிய வாசகர்களையும் கலா ரசிகர்களையும் துயரத்தில் ஆழ்த்தக்கூடியது. மாபெரும் எழுத்துக் கலைஞனுக்கு என் இருதயப்பூர்வமான அஞ்சலி எனப் பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார் கமல் ஹாசன்.

இதையும் படிக்க: மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் காலமானார்!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *