உறவுகளின் பின்னணியில் உருவாகும் இப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க நடிகை ஸ்வாசிகா சூரியின் தங்கையாக நடிக்கிறார்.
லப்பர் பந்து படத்தின் மூலம் பிரபலமடைந்த ஸ்வாசிகா தமிழில் சூர்யா – 45 படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
படத்தின் முதல்பார்வை போஸ்டர் நேற்று (ஜன.16) மாலை வெளியாகுமென ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வெளியாகவில்லை.
இந்த நிலையில் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது. அத்துடன் படம் வரும் கோடை விடுமுறைக்கு வெளியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.