மாமல்லபுரம் கடற்கரையில் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு இடைவெளியிட்டு ஆங்கா ங்கே 50-க்கும் மேற்பட்ட ஆமைகள் சடலங்களாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றும் சுமார் 10 கிலோ எடை கொண்ட இந்த ஆமைகள், கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கண்களில் படுவதால் அவர்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.
மரணத்திற்கான காரணங்கள் நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான காலக்கட்டம் ஆமைகளின் இனப்பெருக்கக் காலமாக இருந்தாலும், தற்போது நிலவும் சில சூழலியல் மாற்றங்கள் அவற்றின் உயிருக்கு உலையாக மாறியுள்ளன. மீனவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வ லர்களின் கருத்துப்படி, பின்வரும் காரணங்களால் இந்த உயிரிழப்புகள் நேரிட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது கடலில் கலக்கப்படும் தொழிற்சாலை நச்சுக் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் குப்பைகளை ஆமைகள் தெரியாமல் உண்பது.
பெரிய ரகக் கப்பல்கள் மற்றும் லாஞ்சர்களில் இருந்து வெளியேறும் ஆயில் கழிவுகள் கடல் நீரை மாசுபடுத்துவது. தற்போது கடலில் வீசி வரும் சுழல் காற்று மற்றும் தட்பவெட்ப நிலை மாற்றங்களால் ஆமைகள் திசைமாறி பாதிப்புக்குள்ளாவதாக கூறப்படுகிறது. கோரிக்கை கடற்கரையில் அழுகிய நிலையில் கிடக்கும் ஆமை களின் சடலங்களால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, வனத்துறையினரும் உள்ளாட்சி நிர்வாகமும் இணைந்து உடனடியாக இந்த ஆமைகளின் உடல்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், இந்தத் தொடர் உயிரிழப்புக்கு உண்மையான காரணத்தைக் கண்டறிய ஆய்வு நடத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
