மாமியாரை 19 துண்டுகளாக்கிய மருமகன்: கர்நாடகத்தில் அதிர்ச்சி!

dinamani2F2025 06 172F4di9r4j82FANI 20250617024555
Spread the love

கர்நாடக மாநிலத்தின் துமகூரு மாவட்டத்தில் மாமியாரை 19 துண்டுகளாக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

துமகூரு மாவட்டம் கொரட்டகெரே போலீஸ் எல்லைக்குள்பட்ட பகுதியில் கடந்த ஆகஸ்ட் 7 அன்று காலை ஒரு பாலிதீன் பையில் ஒரு கையின் பாகம் கிடைத்தது. மேலும் அதைத்தொடர்ந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் மற்றொரு பையில் இன்னொரு கையும், இன்னும் சில கி.மீ. தூரத்தில் கால்கள் உள்ளிட்ட உடல் பாகங்களை போலீஸார் கைப்பற்றினர். தொடர்ந்து தலை மற்றும் உடலின் மற்ற பாகங்களும் சிக்கியது.

பாகங்கள் அடிப்படையில் இறந்தது ஒரு பெண் என தெரிய வந்தது. அவரை மொத்தம் 19 துண்டுகளாக கூறு போட்டுள்ளனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து கொரட்டகெரே போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கத் தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் ஆக. 3ம் தேதி கடந்த சில நாள்களுக்கு முன்பு காணாமல் போன பெல்லாவியை சேர்ந்த லட்சுமி தேவி என்பது தெரிய வந்தது. அவரை துண்டுதுண்டாக வெட்டிக் கொன்றதை அவரது கணவர் ஏற்க மறுத்தார். இறுதியாகக் கொலையானது லட்சுமி தேவி என்பதை போலீஸார் உறுதிசெய்தனர்.

கொலை நடைபெற்ற இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை போலீஸார் செய்த ஆய்வில், கடந்த 6ஆம் தேதி உடல் உறுப்புகள் கிடைத்த இடத்திற்கு ஒரு கார் வந்ததும், அந்த காரின் பதிவெண் மூலமாக உரிமையாளரைக் கைது செய்து விசாரித்தபோது இந்த சம்பவத்தில் மூவர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இதில் முக்கிய குற்றவாளியாக லட்சுமி தேவியின் மருமகன் ராமச்சந்திரா, தன் நண்பருடன் சேர்ந்து மாமியாரைத் துண்டுகளாக்கியுள்ளார். இவர் ஒரு பல் மருத்துவராவார். அவர்களிடம் இருந்து கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், விசாரணையில் 47 வயதான ராமச்சந்திரா தன்னை விட 20 வயது இளையவரான லட்சுமி தேவியின் மகளை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக போலீஸார் தெரிவித்தனர். இந்த தம்பதியருக்கு 3 வயது மகள் உள்ளது. லட்சுமி தேவியின் குணாதிசயத்தில் பல் மருத்துவருக்குச் சந்தேகம் எழுந்தது.

தனது மனைவியையும் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திவிடுவார் என்று சந்தேகத்தின்பேரின், வீட்டிற்கு வந்த மாமியாரை திட்டம்போட்டு அழைத்துச்சென்று கழுத்தை நெரித்து கொன்று துண்டுகளாக்கியுள்ளார் ராமச்சந்திரா. இந்த சம்பவம் தொடர்பாக மூவரையும் போலீஸார் கைது செய்தனர்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *