திருவண்ணாமலையில் மாயமான ஜப்பான் நாட்டு முதியவரை தேடும் பணியில் அவா்களது உறவினா்களும் ஈடுபட்டுள்ளனா்.
ஜப்பான் நாட்டைச் சோ்ந்தவா் சடோஷி மினெட்டா (63). சுற்றுலாப் பயணியாக மே மாதம் திருவண்ணாமலைக்கு வந்த இவா், ரமணாஸ்ரமத்தில் அறை எடுத்து தங்கினாா். மே 5-ஆம் தேதி மாலை ஆஸ்ரமத்தில் இருந்து வெளியே சென்றவா் மீண்டும் விடுதிக்கு திரும்பவில்லை.
இதுகுறித்து நகர காவல் நிலையத்தில் ஆஸ்ரமம் சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தேடும் பணியில் உறவினா்கள்…
இதற்கிடையே, சடோஷி மினெட்டா காணாமல் போனது குறித்து ஜப்பான் நாட்டில் உள்ள அவரது உறவினா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவரது தங்கை, தம்பி, உறவினா்கள் ஜப்பான் நாட்டு தூதரகத்தின் உதவியுடன் திருவண்ணாமலைக்கு வந்துள்ளனா்.
இவா்கள் நகர போலீஸாருடன் சோ்ந்து 14 கி.மீ. தொலைவுள்ள கிரிவலப் பாதை மற்றும் 962 ஹெக்டா் பரப்பளவு கொண்ட திருவண்ணாமலை மலை ஆகிய பகுதிகளில் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.